full screen background image

கும்பகோணத்தில் நயன்தாரா-ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ ஷூட்டிங் துவக்கம்..!

கும்பகோணத்தில் நயன்தாரா-ஜீவா நடிக்கும் ‘திருநாள்’ ஷூட்டிங் துவக்கம்..!

கல்யாண சர்ச்சையை மீடியாக்கள் கிளப்பினாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது வேலையில் மிகவும் பிஸியாக மூழ்கிவிட்டார் நயன்தாரா.

ஜீவாவுடன் இணைந்து நயன்தாரா நடிக்கும் புதிய படம் ‘திருநாள்’. ‘ஈ’ படத்திற்குப் பிறகு இந்த ஜோடி இணையும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் எழுதி, இயக்குகிறார்.

இந்தப் படம் ஒரே ஷெட்யூலில் படமாக்கப்படவுள்ளதாம். ஒரு மாத காலம் ஷூட்டிங் நடைபெறவுள்ளது. இதற்காக படக் குழுவினர் நேற்றைக்கு கும்பகோணத்திற்குக் கிளம்பிவிட்டனர். நயன்தாராவும் இப்போது கும்பகோணத்தில்தான் முகாமிட்டுள்ளாராம். இந்தப் படத்தில் கருணாஸ், ஜோ மல்லூரி, ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனராம்.

‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படமும் இதே கும்பகோணத்தில்தான் முழுமையாகப் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score