‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகிறது..!

‘நட்புனா என்னானு தெரியுமா’ திரைப்படம் மே 17-ம் தேதி வெளியாகிறது..!

லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’.

அறிமுக நாயகன் கவின் ஹீரோவாகவும், ரம்யா நம்பீசன் ஹீரோயினாகவும், அருண்ராஜா காமராஜா மற்றும் ராஜு இருவரும் ஹீரோவுக்கு இணையான  பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகர்கள் இளவரசு, அழகம் பெருமாள், மன்சூர்அலிகான், மொட்டை ராஜேந்திரன், ராமா, பபிதா, மதுரை ஆச்சி சுஜாதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – யுவராஜ், இசை – தரண், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், எழுத்து, இயக்கம் – சிவா அரவிந்த்.

சிறுவயது முதல் ஒன்றாகப் படித்து வளர்ந்து தற்போது சேர்ந்தே பிசினஸ் செய்து வருகிறார்கள் மூன்று நெருங்கிய நண்பர்கள். இவர்கள் ஒரு பெண்ணைப் பார்த்ததும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் நட்பில், தொழிலில், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் நகைச்சுவை கலந்து இத்திரைப்படம் சொல்கிறது.

இந்தப் படத்தை ‘க்ளாப் போர்டு புரொடக்சன்ஸ்’ நிறுவனம் வரும் மே 17-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறது.

Our Score