full screen background image

நண்பர்கள் நற்பணி மன்றம் – திரை முன்னோட்டம்

நண்பர்கள் நற்பணி மன்றம் – திரை முன்னோட்டம்

ஸ்ரீஅண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக சி.மாதையன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் ‘நண்பர்கள் நற்பணி மன்றம்.’

இந்தப் படத்தில் ஜெய்நாத் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அக்சயா நடிக்கிறார். மற்றும் அன்பாலயா பிரபாகரன், ஆடுகளம் நரேன், இமான் அண்ணாச்சி, சிங்கம்புலி, ரவிமரியா, சார்மிளா, முத்துக்காளை இவர்களுடன் முக்கிய வேடத்தில் ராதாபாரதியும் நடிக்கிறார்.

கலை  – பத்மநாப கதிர்

ஒளிப்பதிவு   –  வி.செல்வா

இசை  –  ஸ்ரீகாந்த்தேவா

எடிட்டிங்   –  லான்சிமோகன்

பாடல்கள்   –   நா.முத்துகுமார், யுகபாரதி, ரவிபாரதி, கவிபாஸ்கர்

நடனம்   –  சஞ்சய்கண்ணா

தயாரிப்பு நிர்வாகம்   –   பழனியப்பன், ரஞ்சித்

தயாரிப்பு மேற்பார்வை  – ராதாகண்ணன்

இணை இயக்குனர் –  சங்கர்சாரதி

தயாரிப்பு   –  சி.மாதையன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராதாபாரதி.

இவர் பிரசாந்த் அறிமுகமான ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தை இயக்கியவர்.அத்துடன் சரவணன் அறிமுகமான ‘வைதேகி வந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’, ‘காற்றுள்ளவரை’, ‘அக்கரை சீமையிலே’ போன்ற படங்களை இயக்கியவர். வெற்றி பெற்ற ஏராளமான படங்களுக்கு கதாசிரியராகவும் இருந்துள்ளார்.

இதுவரை தனது எல்லா படங்களிலும் தேவாவை வைத்து எல்லா படங்களையும் ஹிட் கொடுத்த ராதாபாரதி, முதன் முறையாக ஸ்ரீகாந்த்தேவாவுடன் இணைந்து சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கி இருக்கிறார்.

ஊரில் ஒரு பிரச்னை என்றால் நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஓடிப் போய் உதவி செய்து அந்த பிரச்சனையை தீர்ப்பார்கள். அப்படி பிரச்சனைகளை தீர்க்கும் நண்பர்கள் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்கே, காதல் பிரச்னை வரும் போது ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து எப்படி பிரச்சனைகளை தீர்க்கிறார்கள் என்பதுதான் கதையாம்.

Our Score