வாராஹி சலனசித்திரம் மற்றும் சாய் கோரப்பட்டி புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் மோகன்லால், கவுதமி நடிக்க ‘நமது’ என்ற தமிழ்ப் படம் உருவாகியுள்ளது.
இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாள மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மனமன்தா’ என்று பெயர் சூட்டியுள்ளார்கள்.
மலையாளத்தில் அமோக வெற்றி பெற்ற ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தில் ஜோடி சேர்ந்த மோகன்லால் – கவுதமி ராசியான ஜோடி என்று கேரளாவில் போற்றப்படுவதுண்டு. மற்றும் விஸ்வநாத் – ஹனிஷா ஆம்ரோஷ் இன்னொரு ஜோடியாக நடிக்கிறார்கள். மேலும் நாசர், ஊர்வசி, சந்திரமோகன், கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவ், இசை – மகேஷ் சங்கர், தயாரிப்பு – ரஜினி கோரப்பட்டி, எழுதி இயக்குபவர் சந்திரசேகர் ஏலட்டி. இவர் தெலுங்கில் கோபிசந்த் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்த படங்களை இயக்கியவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மூன்று மொழிகளிலும் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று இந்தப் படம் ரிலிஸ் ஆகவுள்ளது.