மலர்விழி புரொடெக்சன்ஸ் பட நிறுவனம் சார்பாக D.ரஞ்சித்குமார், A.M.தேவகுமாருடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘நாகர்கோவில் சந்திப்பு’.
இந்தப் படத்தில் ‘அங்காடி தெரு’ மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஜோதிகிருஷ்ணா நடிக்கிறார். மற்றும் சுகன்யா, ஷங்கிரின் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பிரகாஷ்
இசை – ராஜ்பாஸ்கர்
பாடல்கள் – நந்தலாலா
நடனம் – சத்யாசெல்வி
வசனம் – ஜான்பீட்டர்
நிர்வாக தயாரிப்பு – பி.ஏலுமலை
இணை தயரிப்பு – A.M.தேவகுமார்
தயாரிப்பு – D.ரஞ்சித்குமார்
எழுத்து இயக்கம்- ஜி.ஜீ.அசோகன்
படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்…
“பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் படிக்காமல் எதிர்கால சிந்தனை இல்லாமல் இருகிறார்கள்…அவர்களை பார்த்து பரிதாபப்பட்ட ஆசிரியை சுகன்யா அவர்களை திருத்த அறிவுரை சொல்கிறார். அது பிடிக்காத மாணவர்கள் சுகன்யாவை மாடியிலிருந்து தள்ளி விடுகிறார்கள். அந்த குற்றத்திலிருந்து தப்பித்தார்களா… இல்லையா..? என்பதுதான் கதை!
படத்தின் பெரும்பகுதி நாகர்கோவில் பகுதிகளில் நடைபெறுகிறது. இப்போதைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மனதில் வைத்து எடுத்திருக்கிறோம்..” என்றார்.
காலத்துக்கேற்ற கதைதான்..!