full screen background image

“சூர்யாகூட நானும் நடிக்கணும்..” – நாகார்ஜூனாவின் ஆசை..!

“சூர்யாகூட நானும் நடிக்கணும்..” – நாகார்ஜூனாவின் ஆசை..!

‘அஞ்சான்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘சிக்கந்தர்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா கடந்த 31-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கு மாஸ் நடிகர் நாகார்ஜூனா கலந்து கொண்டு பாடலை வெளியிட, ஹிட் இயக்குநர் ராஜமெளலி பெற்றுக் கொண்டார். மேலும் படத்தில் நடித்த நடிகர், நடிகையர் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய நாகார்ஜூனா, தமிழ் நடிகர்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து தான் மிகவும் பெருமைப்படுவதாகக் கூறினார்.

நாகார்ஜூனா பேசுகையில், “கோடம்பாக்கத்தில் இருந்து வரும் கலைஞர்களுக்கும், நடிகர்களுக்கும் தெலுங்கு தேசம் மிகப் பெரிய ஆதரவளிப்பதை நினைக்கும்போது ரொம்பவும பெருமையா இருக்கு. அதேபோல் தமிழ்ப் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவும் பெருமைக்குரியது. இங்கே வந்திருக்கும் சூர்யா, லிங்குசாமிக்கு தெலுங்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் இந்த மிகப் பெரிய வரவேற்பினால் பெரிதும் சந்தோஷப்படுகிறேன்..

சூர்யாவும் இப்போ என்கிட்ட சொன்னார்.. இது மாதிரி ஒரு மிகப் பெரிய மாஸ் ரசிகர் கூட்டத்தை தமிழ்நாட்டில்கூட நான் பார்த்ததில்லைன்னு.. உங்க எல்லாருக்கும் அதுக்காக ஒரு சல்யூட். சூர்யா இங்க வந்திருப்பதே நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம்.

சூர்யா பேசும்போது சொன்னார்.. ‘அவர் ராஜமெளலியின் இயக்கத்தில் நடிக்கணும்’னு.. எனக்கு என்ன தோணுதுன்னா.. ‘நான் இப்போ சூர்யாவோட படத்துல நடிக்கணும்’னு நினைக்கிறேன்.

சூர்யா நல்ல நடிகர் மட்டுமில்லை.. நல்ல மனிதரும்கூட.. நான் ஒரு முறை எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அவரை அழைத்தபோது அவரும், அவருடைய மனைவியும் நேரில் வந்து கலந்துக்கிட்டு உதவி செஞ்சாங்க.. அதுக்காக இங்கேயும் ஒரு தடவை அவருக்கு தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்.. தேங்க் யூ சூர்யா..” என்றார்.

Our Score