‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..!

‘நடுவன்’ படத்தில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்..!

Banner Cue Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘நடுவன்’.

இந்தப் படத்தில் பரத் கதையின் நாயகனாகவும், அறிமுக நாயகியான அபர்ணா வினோத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தில் நடித்திருக்கும் கோகுல் இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மேலும், சார்லி, யோக் ஜிபி, ‘அருவி’ பாலா, தசரதி குரு, ‘ராஜா ராணி’ கார்த்திக், சுரேஷ் ராஜூ, மது, குழந்தை நட்சத்திரமான ஸ்வேதா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – யுவா, இசை – தரண், பாடல்கள், கார்க்கி, டாக்டர் பர்ன், ‘மிர்ச்சி’ விஜய், படத் தொகுப்பு – சன்னி சவரவ், கலை இயக்கம் – வி.சசிகுமார், இணை தயாரிப்பு – மது, தயாரிப்பாளர் – LUCKY CHHAJER.

‘இனிது இனிது’, ‘இசக்கி’, ‘மாலை நேரத்து மயக்கம்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் நடிகர் ஷராங்க் என்னும் ஷரண் குமார், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

நடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும்  சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். தற்போது முதல்முறையாக, இந்தப் படத்தில் ஒரு தந்தை கேரக்டரில்  நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார்.

IMG_9440

“மலைப் பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் திரைப்படம்,  ஏராளமான சவால்களை கொண்டிருந்தது…” என்கிறார் படத்தின் இயக்குநர் ஷராங்க்.

இது பற்றிப் பேசிய இயக்குநர் ஷராங்க், “படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப் பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக் காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர்.

இதைச் செய்யச் சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள்கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ்நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர்.

ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது  நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில்  கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார்.

ஒரு சண்டைக் காட்சியில் எந்த காயமும் படாமல் ஒரே டேக்கில் நடித்து எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் பரத். இரவு நேரத்தில் ஒரு சண்டைக் காட்சியில், கோகுல் ஆனந்தின் தலையில் கடுமையாக அடிபட்டது. மிகவும் குளிராக இருந்தது, உண்மையில் யாராக இருந்தாலும் ஒரு பிரேக் கேட்டிருப்பார்கள். ஆனால், அவர் தொடர்ந்து காயத்துடன் நடித்தார்.

‘உறியடி’ மற்றும் ‘ராட்சசன்’ போன்ற திரைப்படங்களில் சிறந்த சண்டைக் காட்சிகளை வழங்கிய சண்டைப் பயிற்சியாளர் விக்கி அவர்களுக்குத்தான் அதிக நன்றியை தெரிவிக்க வேண்டும்..” என்றார்.

Our Score