சில ஆண்டுகளுக்கு முன்பு பல யூனிட்டுகளாக பிரிந்து, பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி 24 மணி நேரத்தில் ‘சுயம்வரம்’ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம்.
இப்போது அதிலிருந்தும் பாதி நேரத்தில்.. அதாவது வெறும் 12 மணி நேரத்தில் ஒரே இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார்கள்.
ஜெயலக்ஷ்மி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக V.S.மோகன்குமார் தயாரிக்கும் படமான ‘நடு இரவு’ என்ற இந்தப் படம்தான் இந்த சாதனையைச் செய்யவிருக்கிறது. இந்த படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்களே..!
இந்த படத்தின் துவக்க விழா தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். மற்றும் கலைப்புலி ஜி.சேகரன், இயக்குனர் சக்தி சிதம்பரம் ஆகியோர் தலைமையில் இன்று காலை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது.
ஒளிப்பதிவு – உலகநாதன்
இசை – S.ரமேஷ் கிருஷ்ணா
எடிட்டிங் – விஜய் ஆனந்த்
கலை – C.P.சாமி
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் புதுகை மாரிசா.
தயாரிப்பு – வி.எஸ்.மோகன்குமார்.
படம் பற்றி இயக்குனர் புதுகை மாரிசாவிடம் கேட்டோம்….
“இம்மாதம் 19-ம் தேதி படப்பிடிப்பை நடத்த இருக்கிறோம். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள் அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க உள்ளோம். பேய் சம்மந்தப்பட்ட கதை என்பதால் முற்றிலும் புதுமுகங்களை வைத்து எடுக்கிறோம். பேய் என்பதால் தெரிந்த முகங்கள் எதுவும் தேவையில்லை. எந்த பேயாக இருந்தாலும் திகில் இருந்தால் போதும் என்பது என் கருத்து. முக்கிய வேடத்தில் மோனிகா என்ற சிறுமி நடிக்கிறார்..” என்றார் இயக்குனர் புதுகை மாரிசா.
இத்திரைப்படம் சாதனை படைக்க எமது வாழ்த்துகள்..!