சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள்-2′-ம் பாகம் உருவாகிறது..!

சமுத்திரக்கனி-சசிகுமார் கூட்டணியில் ‘நாடோடிகள்-2′-ம் பாகம் உருவாகிறது..!

2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில், நடிகர் சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வசூலில் புரட்சி செய்தது.

இதன் பின்னர் இந்த ஜோடி சேர்ந்து இயங்கவில்லை. சமுத்திரக்கனி தனி இயக்குநராகவும், நடிகராகவும் பிரகாசித்து தேசிய விருதுவரையிலும் போய்விட்டார்.

சசிகுமாரும் இதுவரையிலும் 14 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துவிட்டார். கடைசியாக சசிகுமார் நடித்த ‘கொடி வீரன்’ திரைப்படம் சென்ற மாதம் வெளிவந்திருந்தது. இந்த நேரத்தில் மீண்டும் சமுத்திரக்கனி – சசிகுமார் வெற்றிக் கூட்டணி இணையவுள்ளது.

‘நாடோடிகள்’ மற்றும் இன்ஸ்பைர் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மிகுந்த பொருட்செலவில் இந்த புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளன.

இந்த பிரம்மாண்டமான படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க படத்தை சமுத்திரக்கனி இயக்கவுள்ளார். இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்திற்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – ஜாக்கி, படத்தொகுப்பு – A.L.ரமேஷ்.

தமிழர் திருநாளன்று இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக் குழுவினர், ‘நாடோடிகள்’ படத்தை போன்றே ‘நாடோடிகள்-2’ படமும் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்படி இருக்கும் என்கின்றனர்.

‘நாடோடிகள்-2 ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Our Score