மதுரையில் ‘நாடோடிகள் – 2’ படத்தின் படப்பிடிப்பு

மதுரையில் ‘நாடோடிகள் – 2’ படத்தின் படப்பிடிப்பு

2009-ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த ‘நாடோடிகள்’ திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரக்கனியின் இயக்கத்தில் ‘நாடோடிகள்– 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இதில் சசிகுமார், அஞ்சலி இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி,  அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,  கு.ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்பராயன், ஈ.ராம்தாஸ், கோவிந்தமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனியே நடித்திருக்கிறார்.

இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – ஏகாம்பரம், கலை – ஜாக்கி, படத் தொகுப்பு – ரமேஷ், பாடலாசிரியர் – யுகபாரதி, சண்டை பயிற்சி –  திலீப் சுப்புராயன், நடனம் – திணேஷ், ஜான், மக்கள் தொடர்பு – மெளனம் ரவி , தயாரிப்பு மேற்பார்வை – சிவச்சந்திரன், தயாரிப்பு – எஸ்.நந்தகோபால், எழுத்து, இயக்கம்  – சமுத்திரக்கனி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பாடல் காட்சி ஒன்றை பல லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான அரங்குகளை அமைத்து அதில் படமாக்கி உள்ளனர். படப்பிடிப்பு ஒரே கட்டத்தில் நடைபெற்று முடிவடைய உள்ளது.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் சமுத்திரக்கனி, “முதல் பாகத்தை போலவே இதிலும் அனைவரையும் கவரக் கூடிய பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இளைஞர்களை  கவரும் வகையில் பல காட்சிகள் இருக்கும். இந்த கூட்டணியின் உழைப்பு அசாதாரணமானது. எனவே வெற்றி குறித்து எந்த சந்தேகமும் இல்லை…” என்றார்.

Our Score