ஸ்ரீபெரிய நாயகி அம்மன் பிலிம் சார்பில் கோயம்புத்தூர் ஆர்.விஸ்வநாதன் தயாரிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’.
இதில் நாயகனாக வாசன் கார்த்திக் நடிக்கிறார். இவர் காமெடி நடிகர் சிங்கமுத்துவின் மகன். நாயகியாக அர்ச்சனா நடிக்கிறார்.
மற்றும் தேவராஜ், காதல் தண்டபாணி, கஞ்சா கருப்பு, சிங்கமுத்து, கிரேன் மனோகர், நெல்லை சிவா, பெசன்ட் நகர் ரவி, ரஸ்ஜன் ஆகியோரும் நடிக்கின்றனர். ‘மைனா‘ புகழ் நாகு ‘ஒய்யார நடை நடந்து’ என்ற குத்துப் பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார். கஞ்சா கருப்பு ஒரு காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பழ.ராஜ்கண்ணன்.
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : டி.கவியரசு
பாடல்கள் : நா.முத்துக்குமார், கபிலன்
நடனம் : தினா, ஷோபி, பாலகுமாரன்
எடிட்டிங் : மோகன்
ஸ்டண்ட்: சூப்பர் சுப்பராயன்
படம் பற்றி பேசிய இயக்குநர் ராஜ்கண்ணன், “நாடோடி வம்சத்தினருக்கும் இரண்டு தாதாக்களுக்கும் இடையில் நடிக்கும் மோதல்தான் படத்தின் கதை. ஆக்சன், காதல், காமெடி, சென்டிமெண்ட் கலந்து பிரமாண்டமான செலவில் படம் தயாராகியுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து மற்ற தொழில் நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது..” என்றார்.