full screen background image

ஒரே நேரத்தில் மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியின் கதை ‘நான் வேற மாதிரி’ படம்..!

ஒரே நேரத்தில் மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியின் கதை ‘நான் வேற மாதிரி’ படம்..!

மதுர்யா  புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மனோ கிருஷ்ணா  தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நான் வேற மாதிரி’.

நடிகை மேக்னா எலன்  முதன்முறையாக கதாநாயகியை  மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிக்கிறார்.

மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், மனோ பாலா, முத்துக்காளை மற்றும் புதுமுகங்கள் மனோகிருஷ்ணா, ரமேஷ் குமார், கார்த்திக் ராஜா, தாணு மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

இசை – பரிமள வாசன், ஒளிப்பதிவு – கார்த்திகேயன், பாடல்கள் விவேகா  & கார்கோ, நடன இயக்கம் – ஜாய்மதி, எழுத்து, இயக்கம் – தேவகுமார்.

இத்திரைப்படம் பற்றி இயக்குநர் தேவகுமார் பேசும்போது, “நான் இதற்கு முன்பாக மலையாளத்தில் ‘சிக்னல்’ என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறேன். இது எனக்கு இரண்டாவது படம். இப்படம் முழுக்க முழுக்க கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சஸ்பென்ஸ்  த்ரில்லர் வகையை சார்ந்ததாகும்.

நாயகியை ஒரே நேரத்தில் மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். அந்த மூன்று பேர் காதலையும் அவள் ஏற்றுக் கொள்கிறாள். ஏன்.. எதற்காக… என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸான கதை.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்து தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.  படம் விரைவில் திரைக்கு வர உள்ளது…” என்றார்.

Our Score