யு டிவி மோஷன் பிக்சர்ஸும், விஷால் பிலிம் பேக்டரியும் இணைந்து தயாரிக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேற்று சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ நூறு நாட்கள் ஓடிய படம். அதே தலைப்பில் இப்போது விஷால், லட்சுமி மேன்ன் நடிப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டீஸரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது வீட்டில் வெளியிட்டுள்ளார்.
டீஸரை பார்த்த சூப்பர் ஸ்டார் Narcolepsy என்ற வியாதியை மையமாக்க் கொண்டு கதை எழுதியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுவிட்டார். படத்தின் இசை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரும், சைந்தவியும் பாடிய ஒரு பாடலில் விஷாலின் டான்ஸ் மூவ்மெண்ட்ஸும், டிரெஸ்ஸிங் செலக்சனும் வியக்க வைத்தாகத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார்.
‘இதயம் உன்னைத் தேடுதே’ பாடலை படமாக்கியவித்த்தையும், அந்தப் பாடலில் கேமிராமேன் ரிச்சர்டு எம்.நாதனின் பங்களிப்பையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதே நேரத்தில் ‘சிவாஜி’ படத்தில் ரிச்சர்டு நாதனுடன் தான் பணியாற்றியதையும் நினைவு கூர்ந்துள்ளார் ரஜினி.
லட்சுமி மேன்னின் துள்ளலான நடிப்பும் சூப்பர்ஸ்டாரை கவர்ந்துள்ளது. ‘இதயம் உன்னை’ பாடலில் லட்சுமி மேனனின் ஆக்சன்கள் ரசிக்க வைப்பவையாக இருக்கின்றன என்றும் சொல்லியுள்ளார். மேலும் விஷால் புதிய புதிய கதைகளையும், புதிய இயக்குநர்களையும் ஆதரித்து கை தூக்கிவிடுகிறார். இதனால் விஷாலின் திரையுலக எதிர்காலம் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்று பாராட்டியிருக்கிறார்.
பட ரிலீஸுக்கு முன்பாகவே சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டை பெற்றுவிட்ட திருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர்கள் இப்படத்தை அடுத்த மாதமே ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.