வரும் ஏப்ரல் 11, வெள்ளியன்று ரிலீஸாக இருக்கும் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்துக்கு யு/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
இப்படம் 2 மணி 29 நிமிடம் ஓடக் கூடிய படமாக உள்ளது. துவக்கத்திலும், முடிவிலும் 8 நிமிடங்களுக்கு டைட்டில் காட்சிகள் உள்ளன. இதனையும் சேர்த்தால் மொத்தம் 2 மணி 41 நிமிடங்கள்..
இதில், முதல் பாதி 1 மணி 17 நிமிடங்களும், இரண்டாம் பாதி 1 மணி 12 நிமிடங்களுமாக உள்ளன.
பல கோடிகள் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அந்த முத்தக் காட்சியையும், தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்டிருக்கும் லட்சுமி மேனனுடனான சில காட்சிகளையும் நீக்கிவிட்டு யு சர்டிபிகேட் வாங்கியிருந்தால் கண்டிப்பாக வரிவிலக்குக் கிடைத்திருக்கும்.
ஆனால் வரிவிலக்கின் மூலம் கிடைக்கு்ம் அந்தப் பணமே வேண்டாம்.. இந்தக் காட்சிகள்தான் வேண்டும் என்று இந்தத் தயாரிப்பு டீம் நினைத்திருப்பதுகூட இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது..!
இந்தப் படத்தில் அப்படியென்னதான் அந்த முத்தக் காட்சி அப்படியொரு அத்தியாவசியம்..?
வரட்டும்.. பார்த்திருவோம்..!