J.S.K. சதீஷ், லியோ விஷன்ஸ் மற்றும் 2-C Entertainment Private Limited ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’. இதில் அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிக்க, ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார்.
‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறித்தனத்தைத் தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதைத்தான் கதை விவரிக்கிறது.
அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இந்த ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள்.