புதிய பட நிறுவனமான கிருஷ்ணா டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க.’
இந்தப் படத்தில் இந்தரஜித் கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புதுமுகம் தேவிகா மாதவன்.
முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான மாதவன் இயக்குகிறார்.
நகைச்சுவை நட்சத்திரங்கள் நிறைய பேர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் மையக் கருத்து “துன்பங்கள் வரும்போதும் சிரிக்கத்தான் வேண்டும்..” என்பதாம். எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலு பேருடைய கருத்து என்ன என்பதைப் பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பற்றியும் கவலைப்படும் சமூகம் நம்முடையது. இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம்தான் இந்த ‘;நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’.










