பனிமதி பிலிம்ஸ் புரொடெக்சன்ஸ் சார்பில் எம்.ஜி.ராஜா தயாரிக்கும் புதிய படம் ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’.
இயக்குநர் ஆர். பாண்டியராஜன் மற்றும் பல இயக்குகநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இந்தப் படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் ராஜ், காந்தராஜ், சமர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்க முதல் கட்ட படபிடிப்பு இதுவரை படப்பிடிப்புகளே நடந்திறாத கள்ளக்குறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற எதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ‘புன்னகை’ வெங்கடேஷ், இசை – ஆர்.சிவசுப்புரமணியன், சண்டை பயிற்சி – மாஸ் மனோ, நடனம் – ஜாய்மதி, தயாரிப்பு மேற்பார்வை – P.தேவன், இணை தயாரிப்பு – G. இளவரசி.
மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான்,.? அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்தும், குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையான திரைக்கதையுடன் கூறும் படமே இந்த ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’.
இத்திரைப்படம் விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்காக பரபரப்பாக அடுத்த கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில் இதன் அடுத்தக் கட்டப் பிடிப்பிடிப்பு இம்மாதம் நடைபெறவுள்ளது.