இயக்குநர் பாலாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – என்.சிவக்குமார், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், கலை இயக்கம் – சி.எஸ்.பாலசந்தர், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, ஒளிப்பதிவு – சூர்யா, இசை – இளையராஜா, தயாரிப்பு – பி ஸ்டூடியோஸ் – EON ஸ்டூடியோஸ், எழுத்து, இயக்கம் – பாலா.
இன்று காலை பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்தப் படத்தின் பூஜை நிகழ்வில் இசைஞானி இளையராஜா, நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, ஜி.வி.பிரகாஷ்குமார், ஜோதிகா, டி.சிவா மற்றும் படத்தில் பங்கு பெறும் அனைத்து கலைஞர்களும் கலந்து கொண்டனர்.