full screen background image

மிஷ்கின் இயக்கும் புதிய திரைப்படம்..!

மிஷ்கின் இயக்கும் புதிய திரைப்படம்..!

இயக்குநர் மிஷ்கின் ‘பிசாசு’ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு தற்போது ‘சவரகத்தி’ என்கிற படத்தில்  நடித்து வருகிறார்.

இப்போது தன்னுடைய இயக்கத்தில் ஒரு புதிய படத்தை துவக்கப் போவதாகவும் அறவித்துள்ளார்.

Trans world telecommunications  என்ற புதிய நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் ஷ்யாம் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

‘சவரகத்தி’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்பின் இடையிலும் இயக்குநர் மிஷ்கின் தனது புதிய  படத்தின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறார். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் துவங்கவுள்ளதாம்.

Our Score