அஜய் அர்ஜூன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்க எழுத்தாளர் அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு “மைலாஞ்சி” என்று பெயர் வைத்துள்ளனர்.
மேலும் சிறப்பம்சமாக இசைஞானி இளையராஜா இந்தப் படத்திற்கு பாடல்கள் எழுதி இசையமைக்கிறார். வெற்றி மாறனின் விடுதலை படத்துக்குப் பிறகு அவரே பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் என்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு.
இப்படத்தில் கன்னி மாடம் புகழ் ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கோலிசோடா-2 நாயகி க்ருஷா குரூப் ஆகியோர் நாயகன் நாயகியாக நடிக்க, உடன் யோகிபாபு, முனிஷ்காந்த் ஆகியோரும் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு – செழியன், படத் தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்கம் – லால்குடி இளையராஜா,
இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து ஊட்டியில் நடைபெற்று வருகிறது.