திரைப்படம் வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்ல, சமூகப் பொறுப்பை எடுத்துரைக்கும் ஒரு சக்தியாகவும் இருக்க முடியும் என்பதை ‘மை டியர் டாலி’ படக் குழு நிரூபித்துள்ளது.
வி.ஜே. பப்பு – அனுபமா இணைந்து நடித்துள்ள ‘மை டியர் டாலி’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கும் நிலையில், தயாரிப்பாளர் எம்.ஜே. சிவராமகிருஷ்ணா எடுத்துள்ள ஒரு முக்கியமான முடிவு தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது. காதல் கதையை மையமாக கொண்டு உருவான இப்படத்தில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை உணர்வுபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரையில் மட்டும் அந்த வேதனையை காட்டி நிற்காமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், படத்தின் மொத்த வசூலில் இருந்து ஒரு பகுதியை இரத்த புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு வழங்க இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். “சினிமா சமுதாயத்துடன் இணைந்து நடக்க வேண்டும்” என்ற நோக்கத்தின் வெளிப்பாடாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
சிம்ம மூர்த்தி சினிமாஸ் சார்பில் ஜெயராமசந்திரன் மற்றும் சிவராமகிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்தை அரவிந்த் ராஜ் எழுதி இயக்கியுள்ளார். கே.பி.ஒய். ராஜவேலு, சுதா, தாரா, கீர்த்தனா, ஆஷா, ராஜாமணி, பேபி தீக்ஷிதா, டொமினிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி கே. சேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சித்தார்த் படத்தொகுப்பு செய்துள்ளார். எம். ஃபாஸில் இசையமைத்துள்ள நிலையில், நிர்வாக தயாரிப்பை ஆர். திருமலை கவனித்துள்ளார்.
திரையில் விழிப்புணர்வு – வெளியுலகில் மனிதநேயம் என்ற இரு தளங்களிலும் ‘மை டியர் டாலி’ பேசப்படத் தொடங்கியுள்ளது. ஒரு நல்ல முயற்சி இன்னும் பலருக்கு ஊக்கமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

Cinema is not just a medium of entertainment; it can also serve as a powerful tool for social responsibility — and the team of My Dear Dolly has proven just that.
Starring V.J. Bappu and Anupama, My Dear Dolly has been released worldwide. At this time, producer M.J. Sivarama Krishnan has made an important announcement that has drawn attention. The film, which revolves around a love story, sensitively portrays the struggles of children affected by blood cancer.
Rather than limiting that pain to the screen, the producer has decided to bring about real change in society. He announced that a portion of the film’s total revenue will be donated to children undergoing treatment for blood cancer. This gesture is being seen as a reflection of the belief that cinema should move hand in hand with society.
Produced by Jayaramachandran and Sivarama Krishnan under the banner of Simma Moorthi Cinemas, the film is written and directed by Aravind Raj. The cast also includes KPY Rajavelu, Sudha, Thara, Keerthana, Asha, Rajamani, Baby Deekshitha, Dominic, and others in key roles.
Cinematography is handled by Balaji K. Sekar, editing by Siddharth, and music is composed by M. Fazil. The executive production is overseen by R. Thirumalai.
With its blend of on-screen awareness and off-screen humanity, My Dear Dolly has begun to make an impact. There is no doubt that this meaningful initiative will inspire many others to follow suit.









