full screen background image

‘முத்துக்குமார் வான்டட்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

‘முத்துக்குமார் வான்டட்’ திரைப்படத்தின் முன்னோட்டம்

இந்தியன் டிரீத் தியேட்டர்ஸ் சார்பாக முனியாண்டி கேசவன் மற்றும் R. வேல் சரவணன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘முத்துக்குமார் வான்டட்’.

இந்தப் படத்தில் நாயகனாக சரணும், நாயகியாக நஷிராவும் அறிமுகமாகியிருக்கிறார்கள். மற்றும் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி, ரோபோ சங்கர், சாய்ராம், அசார், பாம்பே கௌசல்யா, வாணி, பேபி அம்மு, பேபி மனிஷா ஆகியோரும் நடித்துள்ளார்கள். சுந்தரா இசையமைத்துள்ளார். எம்.பத்மநாபன் இயக்கியுள்ளார்.

படம் பற்றி பேசிய இயக்குநர் எம்.பத்மநாபன், “சென்னையில் பெற்றோருடன் வசித்து வரும் ஹீரோயின் ஆனந்திக்கு சிறு வயது முதலே முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப் பொருட்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் அந்த பரிசுப் பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் ஆனந்தியால் முடியவில்லை. இந்நிலையில் ஆனந்திக்கு நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் ஒரு பரிசுப் பெட்டகத்தை அனுப்பிய முத்துக்குமார் அதனுடைய சாவி தன்னிடம் இருப்பதாகவும், தான் மலேசியா செல்லவிருப்பதால் ஏர்போர்ட் வந்து சாவியை பெற்றுக் கொள்ளும்படியும் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்புகிறான். அப்படி ஏர்போர்ட் வரத் தவறினால் மலேசியா வந்து பெற்றுக்கொள்ளவும் என அக்கடிகத்தத்தில் எழுதப்பட்டிருக்கிறான்.

ஆனந்தி முத்துக்குமாரை சந்திக்க ஏர்ப்போட் செல்கிறாள் ஆனால் அதற்குள்ளாகவே முத்துக்குமார் மலேசியா சென்று விடுகிறான். திருமணத்திற்கு ஐந்து நாட்கள் உள்ள நிலையில் தந்தையின் அனுமதி பெற்று முத்துக்குமாரைத் தேடி மலேசியா செல்கிறாள் ஆனந்தி,

அங்கு அவளுக்கு ஏற்படும் சுவையான சம்பவங்களையும், அவள் முத்துக்குமாரை சந்தித்தாளா..? அந்த பெட்டகத்தின் சாவியை பெற்றுக் கொண்டாளா என்பதையும் நகைக்சுவை கலந்து விறுவிறுப்புடன் படமாக்கியிருக்கிறோம்..” என்றார்.

தொழில் நுட்பக் கலைஞர்கள்

ஒளிப்பதிவு – M.G. குமார்

படத்தொகுப்பு – M.S. பிரேம்நாத்

இசை – சுந்தரா

பின்னணி பாடியவர்கள் – நரேஷ் ஐயர், சத்யன் , பிரியதர்ஷினி, திவாகர்,மதுமிதா, சிந்தியாஷினி, சாஸ்தன், Cococo நந்தா, O.G.தாஸ்

பாடல்கள் – Cococo நந்தா

தயாரிப்பு வடிவமைப்பு – V.C. ஜெயமணி

மக்கள் தொடர்பு – ஆனந்த்

Our Score