‘முருகாற்றுப்படை’ – திரை முன்னோட்டம்..!

‘முருகாற்றுப்படை’ – திரை முன்னோட்டம்..!

சிகரம் விஷூவல் மீடியா சார்பில் ஆர்.சரவணன் தயாரித்திருக்கும் படம் ‘முருகாற்றுப்படை’. இதில் தயாரிப்பாளர் சரவணனே ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோயினாக நவீக்கா அறிமுகமாகியிருக்கிறார்.

மேலும், V.S.ராகவன், ராஜசிம்மன், ரமேஷ் கண்ணா, பத்மநாபன், ஜெயந்த், சின்னசாமி, ரபீக், தருண் மாஸ்டர், பட்டு மாமி, தேவதர்ஷினி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

A.S.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, A.L.ரமேஷ் படத் தொகுப்பு செய்திருக்கிறார். மோகன்ராஜன் அனைத்து பாடல்களையும் எழுத கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார். ஹரிச்சரண், கானா பாலா, ஜெயமூர்த்தி, திப்பு, MLR கார்த்திகேயன்  ஆகியோர் பாடியிருக்கிறார்கள். K.முருகானந்தம்  கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது கதைச் சுருக்கத்தையே விலாவாரியாக ஒப்பித்துவிட்டார். அவர் சொன்ன இந்த ‘முருகாற்றுப்படை’ படத்தின் கதை இதுதான்.

“சென்னையில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் சிவராமன், இவரின் மகன் முருகன் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் மாணவன். தினமும் கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் அவன், ஒரு  நாள் அரசு கலை கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்தில் ஜாலியாக லூட்டி அடித்து பயணம் செய்வதை பார்த்து ஈர்க்கப்படுகிறான்.

தானும் அப்படி ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என ஆசைப்பட்டு, அரசு பேருந்தில் எறி பயணம் செய்ய முற்படும்போது அதே பேருந்தில் பயணம் செய்யும் கலைக் கல்லூரி மாணவன் கருப்பு முருகனுக்கு உதவி செய்து நண்பனாகிறான். இதனால் இரு கல்லூரி மாணவர்களுக்கு இடையேயிருக்கும் வெறுப்புகள் மறைந்து அவர்களுக்குள் நட்புணர்வு வளர்கிறது.

சமூக விரோதிகளால் முருகனின் அப்பாவுக்கு எற்படும் பிரச்சனைகளை இரு கல்லூரி மாணவர்களும் ஒன்று சேர்ந்து முருகனுடன் துணை நின்று, அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து முருகனையும் அவன் அப்பாவையும் வெற்றி பெற வைப்பதே இந்த ‘முருகாற்றுப்படை’ திரைப்படத்தின் கரு..” என்கிறார் இயக்குநர் முருகானந்தம்.

Our Score