full screen background image

முருகாற்றுப்படை – திரைமுன்னோட்டம்

முருகாற்றுப்படை – திரைமுன்னோட்டம்

சிகரம் விஷூவல் மீடியா சார்பில் ஆர்.சரவணன் தயாரிக்கும் திரைப்படம் ‘முருகாற்றுப்படை’. படத்தின் தலைப்புதான் பக்தி மயமானதே தவிர, படத்தின் கதைக்கும் தலைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கும் இந்தப் படத்தின் கதையும் கொஞ்சம் வித்தியாசமானதுதான்.

கலைக்கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நட்புடன் செயல்பட்டால் இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் வெற்றியை அடையலாம் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். இது நட்புடன் காதல் கலந்த நகைச்சுவைப் படமாகும்.

இதில் கதாநாயகனாக சரவணன் என்ற புதுமுகம் அறிமுகமாயிருக்கிறார். இவர் இப்படத்திற்காக ஒரு வருட காலம் கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். இவருக்கு ஜோடியாக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்த நவீகா ஹீரோயினாக நடித்துள்ளார். மற்றும் வி.எஸ்.ராகவன், ரமேஷ்கண்ணா, தேவதர்ஷிணி, தருண் மாஸ்டர் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.

பாடல்களை மோகன்ராஜ் எழுதியிருக்கிறார். இவர் ‘ஈசன்’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் பாடல்களை எழுதியவர். இசை கணேஷ் ராகவேந்திரா. இவர் பிரபல வீணை இசைக்கலைஞர் பாலச்சந்தரின் பேரன். இதற்கு முன்பு ‘ரேணிகுண்டா’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஏ.எஸ்.செந்தில்குமார். இவர் ரத்னவேலு, என்.ராகவ் ஆகியோரிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும் மேலும் சில விளம்பரப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

படத் தொகுப்பு ஏ.எல்.ரமேஷ். இவர் ‘நாடோடிகள்’, ‘ஈசன்’, ‘போராளி’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய வெற்றி படங்களுக்கு படத் தொகுப்பு செய்துள்ளார். கலை – ராகுல். நடனம் – தினேஷ், சண்டை பயிற்சி – ஆறுபடை முருகன். இவர் கனல் கண்ணனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஏ.அந்தோணி சேவியர் தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், நிகில் முருகன் மக்கள் தொடர்பாளராகவும் பணி புரிகின்றனர்.

இப்படத்தின் இயக்குநர் கே.முருகானந்தம். இவர் இயக்குநர் பாலாவிடம் ‘சேது’ படத்திலும் இயக்குநர் சரண் இயக்கத்தில் வெளிவந்த ‘அமர்க்களம்’, ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜே.ஜே’., ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ போன்ற வெற்றிப் படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணி புரிந்தவர். முதல்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

Our Score