full screen background image

‘முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ படம் ‘காந்தாரா’ போல பேசப்படுமாம்..!

‘முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’ படம் ‘காந்தாரா’ போல பேசப்படுமாம்..!

ஸ்ரீஆண்டாள் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.வீர அமிர்தராஜ் தயாரித்துள்ள திரைப்படம் ‘முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’.

இந்தப் படத்தில் அறிமுக நாயகனாக ஜெயகாந்த் நடித்திருக்கிறார். வில்லனாக ‘கொம்பன்’ பட வில்லன் பிரபல சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் நடித்திருக்கிறார். மேலும் சிங்கம் புலி, முத்துக்காளை, மீராராஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

பாடல்கள் – கவிஞர் சினேகன், இசை – சவுந்தர்யன், ஒளிப்பதிவு – ராம்குமார், படத்தொகுப்பு – S.P.அஹமத், சண்டைப் பயிற்சி இயக்கம் – பயர் கார்த்திக், கலை இயக்கம் – பத்மநாபன், பத்திரிக்கை தொடர்பு – குணா, எழுத்து இயக்கம்-  ராஜா முகம்மது, தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீஆண்டாள் மூவீஸ், தயாரிப்பாளர் – P.வீர அமிர்தராஜ்.

தமிழக கிராமத்து தெய்வங்களில் முக்கியமான தெய்வமான முனியாண்டி சாமியின் பக்தனாக, முனியாண்டி கோயிலில் குறி சொல்லுபவராக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.

ஒரு காட்சியில் முனி அருள் வாக்கு சொல்லுவதுபோல படமாக்கும் வேளையில் நிஜமாக அருள் வந்து வாக்கு சொல்ல ஆரம்பித்ததை கண்டு ஊர் மக்களும் படக் குழுவினர் ஆச்சர்யத்தில் வியந்துள்ளனர்.

முனி வேஷம் கட்டுவதற்கு தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். பாடல் காட்சியிலும், சண்டை காட்சியிலும் முதல் படம் என்று தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார் அறிமுக நாயகன் ஜெயகாந்த்.

மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்று விரைவில் திரையில் வெளியாகவிருக்கிறது ‘முனியாண்டியின் முனிப் பாய்ச்சல்’.

Our Score