இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கியிருக்கும் ‘முந்திரிக் காடு’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார்.
‘தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம்’ என்ற பட நிறுவனம் ‘முந்திரிக் காடு’ என்ற படத்தை தயாரித்துள்ளது.
இந்த படத்தில் இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன் , பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – G.A. சிவசுந்தர், இசை – A.K. பிரியன். (இவர் A.R.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர். 17 வயது கொண்ட இளைஞர்), பாடல்கள் – கவி பாஸ்கர், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், கலை இயக்கம் – மயில் கிருஷ்ணன், சண்டை பயிற்சி – லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை – டி.ஜி.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் – மு.களஞ்சியம்.
படம் பற்றி இயக்குநர் மு.களஞ்சியம் பேசும்போது, “இந்தப் படத்தில் முந்திரிக் காட்டு மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறோம். விலையுயர்ந்த பொருளாக மாறிப் போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும், ஏழ்மையின் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதை இதில் பதிவு செய்திருக்கிறோம்.
சமீபத்தில் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டார். அப்போது படத்தின் இயக்குநர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் A.K. பிரியன், ஒளிப்பதிவாளர் G.A.சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர். படம் விரைவில் வெளியாக உள்ளது…” என்றார்.










