full screen background image

‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..!

‘முந்தானை முடிச்சு’ படத்தின் ரீமேக்கில் சசிகுமார் நடிக்கிறாராம்..!

AVM நிறுவனத்தின் தயாரிப்பில் 1983-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி வெளியான திரைப்படம் ‘முந்தானை முடிச்சு’.

இயக்குநர் கே.பாக்யராஜின் திரையுலக வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படம் இது. ‘நடிப்பு ராட்சசி’ என்றழைக்கப்படும் ஊர்வசி அறிமுகமான திரைப்படம். ‘இசைஞானி’ இளையராஜாவின் இசையில் ஒலித்த பாடல்களும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.

எல்லாவற்றுக்கும் மேலாக முருங்கைக்காயில் ஆண்மை விருத்திக்கான சத்து இருப்பதாக இப்படத்தில் சொல்லப்பட்ட ஒரு செய்திதான் இன்றளவிலும் முருங்கைக்காய்க்கு மவுசைக் கூட்டியிருக்கிறது.

வெறும் 30 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஒன்றரை கோடி ரூபாய்க்கும் மேலான வசூலை சம்பாதித்ததுக் கொடுத்தது.

இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்புதான் இயக்குநர் கே.பாக்யராஜை தனது ‘திரையுலக வாரிசு’ என்று அழைத்தார் ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆர்.

இத்தகைய புகழ் பெற்ற இந்த ‘முந்தானை முடிச்சு’ படத்திற்கு இப்போது ஒரு சோதனை..!!!

baghyaraj-sasikumar-2

‘ரீமேக்’ என்கிற பெயரில் இந்தப் படத்தையும் இப்போது மீண்டும் உருவாக்கப் போகிறார்களாம்.

இந்தப் படத்தை ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பாக்யராஜ், சசிகுமார் இருவரும் இணைந்து பணியாற்றப் போகிறார்கள் என்று தகவல்.. மற்ற நடிகர், நடிகையர்கள் விவரங்களை விரைவில் சொல்வதாக இருக்கிறார்கள்.

ரீமேக் என்பதால் இதில் பாக்யராஜ் நடிக்க வாய்ப்பில்லை. சசிகுமார் நடிக்கவிருக்கிறார் என்பதை யூகிக்கலாம். அந்த கிராமத்தனமான, அப்பாவியான கேரக்டருக்கு சசிகுமார் பொருத்தமாக இருப்பாரா என்பது தெரியவில்லை. படத்தை இயக்குநர் கே.பாக்யராஜே இயக்கலாம் என்று தெரிகிறது.

baghyaraj-sasikumar-1

சமீபத்தில் தயாரிப்பாளர், சசிகுமார், இயக்குநர் கே.பாக்யராஜ் மூவரும் இணைந்து இதற்கான துவக்க வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்..!

எல்லாஞ் சரி.. ‘முந்தானை முடிச்சு’ படத்தின் சரி பாதி வெற்றிக்கான காரணமாக இருந்த ‘இசைஞானி’ இளையராஜாவின் அசத்தலான இசைக்கு ரீமேக்ஸ் செய்பவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

அந்த அளவுக்கு சிறப்பான இசையைக் கொடுக்க இப்போதைக்கு இளையராஜா உட்பட வேறெந்த இசையமைப்பாளருமே தயாராக இல்லை என்பது மறுக்க முடியுமாத உண்மை. இதனால், மறுபடியும் அதே பாடல்களையே ரீமிக்ஸ் செய்யப் போகிறார்களா என்றும் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் ரீமேக் என்னும் கொடுமை இது போன்ற புகழ் பெற்ற, சிறப்பு வாய்ந்த படங்களுக்கு அமையக் கூடாது.. சாதனை படைப்புகள் ஒன்றுதான் இருக்க வேண்டும். இல்லையெனில் முதல் படைப்புக்கே அது இழுக்காகத்தான் இருக்கும்.

பணமே பிரதானமாக இருக்கும் திரையுலகத்தில் இதையெல்லாம் யார் இவர்களுக்குப் புரிய வைப்பது..?

Our Score