இதெப்படி சாத்தியம் என்றே தெரியவில்லை..?
நடிகர் முகேஷ் தனது முன்னாள் மனைவி சரிதாவுக்கும், தனக்கும் கோர்ட் மூலமாக விவாகரத்து கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்.
சரிதாவோ, “அப்படி தீர்ப்பு எதுவும் வரவில்லை.. எனக்குத் தெரியாமல் எப்படி அவர் என்னை டைவர்ஸ் செய்ய முடியும்?” என்கிறார்..? என்ன குழப்பம்டா இது என்று கேரளத்து நீதித்துறை வட்டாரங்கள் விசாரித்து வருகின்றன.
முகேஷும், சரிதாவும் 1989-ல் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஷிரவன், தேஜாஸ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றன. இவர்களில் ஷிரவன் தற்போது எம்.பி.பி.எஸ். டாக்டர்.. தேஜாஸ் பட்டதாரி.. முகேஷும், சரிதாவும் 2007-ம் ஆண்டில் இருந்து பிரிந்து வாழ்கின்றனர்.
கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் ஏற்கேனவே இருவரும் விவகாரத்து கோரி வழக்கு தொடுத்திருந்தனர். அந்த வழக்கு என்னவானது என்பதே தெரியாத நிலையில்.. பிள்ளைகளுக்காக விவாகரத்தை கோராமல் ஒத்திப் போட்டே வந்திருந்தார்கள்.
இந்த நிலையில் திடீரென்று சென்ற வருடம் அக்டோபர் 24-ம் தேதி மெதில் தேவிகா என்பவரை முகேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள.. சரிதா-முகேஷ் மோதலும் ஆரம்பித்தது.
“முகேஷுடனான எனது உறவுக்கு சட்டப்படி இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. அப்படியிருக்க முகேஷ் எப்படி இரண்டாவதாக திருமணம் செய்யலாம்..?” என்று சரிதா கேள்வி எழுப்பினார். முகேஷோ “எங்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பேயே விவாகரத்து கிடைத்துவிட்டது..” என்று சொன்னார்.
மேலும் தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கும் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை வைத்து அசத்திவிட்டார்.. இதனால் கோபமடைந்த சரிதா இது குறித்து மீீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்திருக்கிறது. முகேஷ், சரிதா இருவருடன் அவர்கள் பெற்ற பிள்ளைகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர். முகேஷ் தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வராமல் ஒரு வழக்கை பதிவு செய்து அதன் மூலமாக விவாகரத்து தீர்ப்பை பெற்றிருப்பதாக சரிதா குற்றஞ்சாட்டியுள்ளார். சரிதா தரப்பு வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட கோர்ட், வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
மனைவிக்கே தெரியாமல் கணவனும், கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் பணத்தைக் கொடுத்து விவாகரத்து பெறுவதை மையப்படுத்தி சினிமாக்கள்கூட வந்துவிட்டன..
இப்போது நிஜத்திலேயே பார்க்க வேண்டியிருக்கு..! உண்மை யாரிடம் இருக்கிறதுன்னு தெரியல..?