LIGHT HOUSE MEDIA நிறுவனம் SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA உடன் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் அஜித்குமார்.J இயக்கத்தில், கிஷோர் குமார், ஆர்ஷா சாந்தினி பைஜூ நடிப்பில் மாறுபட்ட திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘முகை’.
தயாரிப்பு பேனர் – LIGHT HOUSE MEDIA, SHRI DHARMA PRODUCTIONS, JASPER STUDIOS & VISTHAARA, தயாரிப்பாளர் – K.சந்தோஷ், B.தர்மராஜுலு & அஜித் குமார்.J, எழுத்து இயக்கம் – அஜித் குமார்.J, ஒளிப்பதிவு – அர்ஜுன் அக்காட், இசை – சக்தி, படத் தொகுப்பு – சந்தோஷ்.D, பாடல் மற்றும் வசனம் – சோமு வஜவர், ஒலிப்பதிவு – தபஸ் நாயக், DI: ஸ்டீவ் பெஞ்சமின், ஆடை வடிவமைப்பு – சுஷ்மா.S நாயர், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக் குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் சங்கத் தலைவர் தயாரிப்பாளர் K.ராஜன் பேசும்போது, “முகை’ ஒரு அற்புதமான தமிழ் தலைப்பு. இயக்குநர் அஜித்குமார் அவர்களை இதற்காகவே வாழ்த்துகிறேன். நல்ல தமிழ் தலைப்புகள் இருக்கின்றன, தமிழில் தலைப்பு வையுங்கள் என்று நான் நீண்டகாலமாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
மலரின் முன் பருவத்தை குறிக்கும் வகையில் இயக்குநர் தமிழில் தலைப்பு வைத்துள்ளார். இந்த படக் குழுவை வாழ்த்துகிறேன். இந்த காலத்தில் இயக்குநர்கள் ஹாலிவுட் படத்திற்கு இணையாக படத்தை உருவாக்குகிறார்கள். தயாரிப்பாளருக்கு கஷ்டம் தராமல் படத்தை உருவாக்குங்கள். அனைவருக்கும் என் வாழ்த்துகள். படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும்…” என்றார்.
தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும்போது, “ரிஷி என்னுடைய நண்பர். அவருடைய நண்பர் தயாரிப்பாளர் சந்தோஷ். தமிழ் சினிமாவுக்கு கனவுகளோடு இவர்கள் வந்துள்ளார்கள். திறமையான இயக்குநர் அஜித்குமார். சினிமாவின் எதிர்காலம் இளைஞர்களிடம்தான் இருக்கிறது. நிறைய புதுமுக தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருவது மகிழ்ச்சி. இப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்…” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும் தயாரிப்பாளருமான முரளி ராமசாமி பேசும்போது, “டிரெய்லர் அருமையாக உள்ளது. படமும் நன்றாக இருக்கும் என்று தெரிகிறது, படத்தின் தொழில் நுட்ப குழுவினர் அருமையாக பணி செய்துள்ளனர், மக்களிடையே இந்த படம் நல்ல வரவேற்பைப் பெறும், கதைக் களம் புதிதாக இருக்கிறது. இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இப்படத்தை நீங்கள்தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்..” என்றார்.
இயக்குநர் பிரவீன் காந்த் பேசும்போது, “பாட்டிலுக்குள் மரம் இருக்கிறது, அதற்குள் வாழ்க்கை இருக்கிறது என மேடையிலேயே நிரூபித்துவிட்டார்கள். இங்கு பரிசாக தந்த மரத்தை எல்லோரும் பாதுகாப்போம். ‘முகை’ மிகை இல்லாத அருமையான படைப்பாக தெரிகிறது. இந்தப் படம் நிச்சயம் அனைவரும் கவனிக்கும் படமாக இருக்கும். கன்னடத்தில் இருந்து தமிழ் படம் எடுக்க வந்திருக்கிறார்கள். தமிழகம் எல்லோரையும் ஏற்கும். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரும் வெற்றி பெறும்.” என்று வாழ்த்தினார்.
நடிகை ஆர்ஷா சாந்தினி பைஜூ பேசும்போது, “இயக்குநர் அஜீத் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவம். என் மீது நம்பிக்கை வைத்த குழுவினருக்கு நன்றி, படம் வந்ததும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். நன்றி.
இயக்குநர் அஜித்குமார் பேசும்போது, “இது என் முதல் படம், என் குடும்பத்திற்கு என் நன்றி. என் தயாரிப்பாளருக்கு என்னுடைய மிகப் பெரும் நன்றி. நாயகி நடித்த ஒரு யூ டியூப் விடியோ பார்த்து அவரை தேர்வு செய்தேன். மிக நன்றாக நடித்துள்ளார். ஒரே இடத்தில் நடக்கும் கதை. கிஷோர் குமார் சார் இப்படத்தில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். என்னை நம்பி உழைத்த என் படக் குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும், நன்றி..” என்றார்.
தயாரிப்பாளர் ராஜா பேசும்போது, “’முகை’ திரைப்படத்தின் டிரெய்லர் மிகவும் அருமையாக உள்ளது. இசை சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளர் சக்திக்கு வாழ்த்துகள். இது திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டிய திரைப்படம். இந்த படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்…” என்றார்.
தயாரிப்பாளர் சந்தோஷ் பேசும்போது, “என் வாழ்வின் முதல் மேடை இது. நாங்கள் அழைத்து இங்கு வந்து வாழ்த்திய திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை தயாரிக்க ஆதரவாக இருந்த என் குடும்பத்திற்கு என் நன்றி. லாக் டவுனில்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. அஜித்குமார் அப்போது தான் பழக்கமானார். சும்மா இருக்கிறோம். ஏதாவது கதை பண்ணு என்றேன். அப்போது அவர் உருவாக்கிய கதைதான் இது. இந்தப் படத்திற்கு கிஷோர்தான் பொருத்தமாக இருப்பார் என அவரை சந்தித்தோம். அவர் எங்கள் படத்திற்காக கடினமாக உழைத்துள்ளார். கிஷோர் சார் இல்லையென்றால் இந்தப் படம் இல்லை. நாயகி எங்களை நம்பி வந்து நடித்து தந்தார். படம் நன்றாக வர வேண்டுமென தொழில் நுட்பக் கலைஞர்கள் மிகவும் உழைத்துள்ளனர். இப்படத்திற்காக உழைத்துள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள். நன்றி..” என்றார்.












