full screen background image

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது…! 

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது…! 

தற்போது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவும் ஒரு கஷ்டமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது, இதனால் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமித்த கருத்துக்காக ஒட்டு மொத்த தமிழ் சினிமா துறையும் ஒன்றாக இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

‘மிஸ்டர் சந்திரமௌலி’ படக் குழுவும் தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை மதித்து முன்னுதாரணமாக   இருந்திருக்கிறது. ஒட்டு மொத்த ‘மிஸ்டர் சந்திரமௌலி’ படக் குழுவும் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்திருக்கிறது. 

இந்த சிறப்பான செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் கூறும்போது, “சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, படக் குழுவின் சிறப்பான ஒத்துழைப்பு ஆகியவை இல்லையென்றால் இது சாத்தியப்பட்டிருக்காது.

ஒட்டு மொத்த ‘மிஸ்டர்  சந்திரமௌலி’ படக் குழுவும் ஆரம்பத்தில் இருந்தே உச்சபட்ச உற்சாகம், ஆற்றலை கடுமையாக வெளிப்படுத்தினர். தயாரிப்பாளர் சங்கம் வெளிப்புற படப்பிடிப்பை நிறுத்த சொல்லி உத்தரவு பிறப்பித்தபோது ஒட்டு மொத்தக் குழுவும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று காலில் நெருப்பை கட்டிக் கொண்டு வேலை பார்த்தனர். திட்டமிட்ட நேரத்தில் படப்பிடிப்பை முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தக் காலகட்டத்தில் மல்ட்டி ஸ்டாரர் படங்களை குறிப்பிட்ட காலத்தில் முடிப்பது எளிதான காரியம் கிடையாது. நவரச நாயகன் கார்த்திக், கௌதம் கார்த்திக், ரெஜினா கேஸண்ட்ரா, சதீஷ், வரலஷ்மி சரத்குமார், இயக்குநர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன் என அனைத்து பெரிய நட்சத்திரங்களுமே மற்ற படங்களிலும் பிஸியாக இருப்பவர்கள்தான்.

இந்தப் பணிகளை மென்மையாக முடிக்க நிறைய முயற்சிகள் தேவைப்பட்டன. குறிப்பாக பிஸியான இடங்கள், பிஸியான நகரங்கள், நாடுகள் ஆகியவற்றில் நான்கு மாதங்களில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டிய கூடுதல் அழுத்தமும் எங்களுக்கு இருந்தது. 

படத்தின் கேப்டன் இயக்குநர் திரு, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கலை இயக்குநர் ஜாக்கி ஆகியோரின் துணையோடு ஒட்டு மொத்த படத்தையும் வெற்றிகரமாக படமாக்கி முடித்திருக்கிறார்கள்..” என்று பாராட்டியிருக்கிறார் தேசிய விருது பெற்ற ஐகான் தயாரிப்பாளரான ஜி.தனஞ்செயன்.

ஒரு சில படங்களிலேயே ரசிகர்களை கவர்ந்த சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இந்த படத்திற்கு இசையமைப்பது கூடுதல் ஈர்ப்பை கொடுத்திருக்கிறது. 

“படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சினிமா சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிந்தவுடன் துவங்கும். அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் படம் வெளியாகும்…” என்றும் கூறினார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Our Score