full screen background image

சினிமால பாட்டு எழுதறது எப்படின்னு சொல்லித் தர்றாங்களாம்..!

சினிமால பாட்டு எழுதறது எப்படின்னு சொல்லித் தர்றாங்களாம்..!

இப்போதுவரையிலும் தமிழ்த் திரைத்துறையில் நடிப்பு, இயக்கம், இசையமைப்பு, ஒளிப்பதிவு, படத் தொகுப்பு, ஒலியமைப்பு, வாய்ப்பாட்டு போன்ற பிரிவுகளைக் கற்றுக் கொள்ளத்தான் படிப்புகள் உள்ளன. ஆனால் எழுத்துக் கலைக்கென்று தனி கற்றல் இல்லாமல் இருந்தது..!

உலக வரலாற்றில் முதல் முறையாக.. முறைப்படி திரைப்பாடல் எழுதக் கற்றுக் கொள்வதற்காக பாடலாசிரியர் பிரியன் அவர்களால் உருவாக்கப்பட்டு.. பாடலாசிரியர் அண்ணாமலை அவர்கள் துணையுடன் வெற்றிகரமாக இயங்கிவரும் தமிழ்த் திரைப்பாக்கூடம் எனும் அமைப்பு.. துவங்கப்பட்ட முதல் வருடத்திலேயே உச்சத்தைத் தொட்டுள்ளது.

இவ்வகுப்பு குறித்துக் கேள்விப்பட்டு வந்த 500-க்கும் மேற்பட்ட அழைப்புகளை நெறிப்படுத்தி பெறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் இருந்து     25  மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு புதுத் திரைப்பாடல் இயற்றுநர்கள் ஆக, முறையாக திரைப்பாடல் இயற்றும் கலையைக் கற்று வருகின்றனர்.

அவர்களில் தவக்குமார், வினோதன், கலியுக கண்ணதாசன், மதன்குமார், சந்துரு என ஏழுக்கும் மேலான மாணவர்களுக்கு.. இந்தப் படிப்பில் சேர்ந்த ஆறு மாதங்களில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்து, தற்பொழுது திரைப்படங்களில் பாடல்கள் எழுதி உள்ளனர்.  முன்னணி சண்டை பயிற்சியாளரும் இயக்குநருமான ஜாக்குவார் தங்கம் அவர்களின் திரைப்படம் உட்பட.. தமிழ்த் திரைத்துறையில் இருந்து இதுவரை ஆறுக்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் தங்கள் படங்களுக்குப் பாட்டெழுத தமிழ்த் திரைப்பாக்கூடம் வந்துள்ளன.

இந்த மாணவர்களுக்கு பாடலாசிரியர் பிரியன், பாடலாசிரியர் அண்ணாமலை போன்றோர் மட்டுமில்லாமல் மற்ற திரைத்துறை பிரபலங்கள் பலரும் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். பாடல் எழுதக் கற்றுக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல்..  இசையமைப்பாளர்களிடம் இருந்து மெட்டுக்கள் பெற்று.. அதை ஒவ்வொரு மாணவரையும் முறையாக எழுத வைத்து.. அப்பாடலை பாடகர்கள் கொண்டு பதிவு செய்து.. இறுதியாக  ஒவ்வொரு மாணவரும் அந்த மெட்டுக்குத் தாங்கள் எழுதிப் பதிவான பாடலோடு ஒரு முழு நீளத் திரைப்படப் பாடல் இயற்றுநராக உருமாற இப்படிப்பு வழிவகை புரிகிறது. 

தொடர் வெற்றிப் பாடல்களைத் தரும் முன்னணி இசையமைப்பாளரான  விஜய் ஆண்டனி அவர்கள் நேரடியாக இந்த வகுப்பிற்கு வந்து, மாணவர்களோடு கலந்துரையாடி, சிறந்த பாடல்களை எப்படிப் படைப்பது என அறிவுரைகள் கூறி, தனது அடுத்தடுத்தப் படங்களில் நிச்சயம் இம்மாணவர்களை பயன்படுத்துவதாக உறுதி அளித்திருக்கிறார்.

அதேபோல் தற்பொழுது நிறைய படங்களுக்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் ‘தமிழ் படம்’ கண்ணன் அவர்களும் நேரடியாக வகுப்பிற்கு வந்து பாட்டெழுதத் தேவையான பயிற்சிகள் குறித்து விளக்கி, இனி வரும் தனது படங்களில் நிச்சயம் இம்மாணவர்களுக்கு வாய்ப்பளிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.

இதுவரை பல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், பாடகர்கள், திரைத்துறை வித்தகர்கள் வகுப்பிற்கு நேரில் வந்து பாட்டெழுதுதல் குறித்தத் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதோடு, தமது அடுத்தப் படங்களில் பாடல் எழுத இம்மாணவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குவதாகவும் கூறி மகிழ்வித்திருக்கிறார்கள்.

சிறந்த அடுத்தத் தலைமுறைப் பாடலாசிரியர்களை உருவாக்க வேண்டும் என்கிற உயரிய எண்ணத்தோடு தொடங்கப்பட்ட தமிழ்த் திரைப்பாக்கூடம் விரைவில் அடுத்த வருடத்திற்கான மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறது. வருங்காலப் பாடலாசிரியர்களின் பிறப்பிடமாகத் திகழும் தமிழ்த் திரைப்பாக்கூடம் சரியான திசையில் தன் பயணத்தை தொடரவும்.. மேலும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்.

குறிப்புகள் :

 படிப்பு         : திரைப்பாடல் இயற்றுநர் பட்டயப் படிப்பு (Diploma in Lyric Writing)

 காலம்         : ஒரு வருடப் பட்டயப் படிப்பு (One-Year Diploma)

 இடம்          : சென்னை

 வகுப்புகள்   : சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்

 குறைந்தபட்சக் கல்வித் தகுதி :  பத்தாம் வகுப்பு

 சிறப்புத் தகுதி       : கவிதை அல்லது பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருத்தல்

 வயது வரம்பு         : இல்லை

 தொடர்பிற்கு        : தமிழ்த் திரைப்பாக்கூடம் – 8056161139 , 9566196747

 மின்னஞ்சல் : diplyric@gmail.com , diplyric.piriyan@gmail.com

Our Score