full screen background image

மெளனிகாவை வரவிடாமல் தடுத்தது இயக்குநர் பாலாவா..?

மெளனிகாவை வரவிடாமல் தடுத்தது இயக்குநர் பாலாவா..?

கேமிரா கவிஞன் பாலுமகேந்திராவின் உடலுக்கு திரையுலகப் பிரமுகர்களும், பொதுமக்களும், அவரது ரசிகர்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தி வரும் வேளையில் அனைவரது கவனமும் இன்னொரு விஷயத்தையும் முணுமுணுக்க வைத்தது. அது பாலுமகேந்திராவின் துணைவியார் திருமதி மெளனிகா அங்கே இல்லையே என்பதுதான்..!

நேற்று மாலைவரையிலும் பத்திரிகையாளர்கள் விசாரித்தும் எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் மெளனிகாவே சிலரிடம் மன வேதனையுடன் பேசியுள்ளார். பாலுமகேந்திரா சீரியஸ் என்ற தகவல் கிடைத்தவுடன் அவர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார். ஆனால் அங்கே அவரை பார்க்க அனுமதிக்கவில்லையாம்.. அதேபோல பாலுமகேந்திரா இறந்து, அவரது உடலை அவரது பள்ளிக்குத் தூக்கிச் சென்ற பின்பும், மெளனிகா அங்கேயும் வரக் கூடாது என்று பலரும் மிரட்டியதாகவும் புகார் கூறியுள்ளார்.

சிலர் என்று மட்டும் பொதுவாக மெளனிகா கூறினாலும், அது இயக்குநர் பாலாதான் என்கிறது மீடியா. மெளனிகா இங்கே வந்தால் நடப்பதே வேறு என்று கோபப்பட்டாராம் பாலா. கணவரின் இறுதிச் சடங்கு அவருக்குப் பெருமையாக இருக்க வேண்டும். தன்னால் எந்தப் பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காகவே மெளனிகா அங்கே வராமல் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கி்னறன.

‘வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் மெளனிகாவை பாலுமகேந்திராதான் அறிமுகம் செய்து வைத்தார். 1993-ம் ஆண்டு முதல் இருவருக்குமிடையே தொடர்பு இருந்ததாக மெளனிகாவே சொல்கிறார். 2000-ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அனைத்து இரு தார குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் இங்கேயும் இருந்தாலும், மெளனிகாவுடனான உறவை பாலுமகேந்திரா மறுத்ததில்லை..

மெளனிகா தனது துணைவியார்தான் என்று பாலுமகேந்திரா வெளிப்படையாகவே பத்திரிகைகளுக்கு பேட்டிகள் கொடுத்திருந்தார். இருதய அறுவை சிகிச்சை செய்து வீட்டிற்கு வந்த பின்பு, முதல்முறையாக மெளினிகாவின் வீட்டில் சாப்பிட்டபடியே ஒரு பத்திரிகையின் நிருபருக்கு பேட்டியளித்து இதனை ஒப்புக் கொண்டார். 

இதன் பின்னர் பல நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் தம்பதி ஷமேதராக காட்சியளித்தார்கள். மெளனிகாவின் தம்பி திருமணத்தின்போது வந்திருந்த வி.ஐ.பி.க்களை பாலுமகேந்திராவும் சேர்ந்துதான் வரவேற்றார்.  இப்படி வெளிப்படையாக பல நிகழ்ச்சிகளில் தனது துணைவிதான் என்று பகிரங்கப்படுத்தியிருந்தார் பாலுமகேந்திரா. மேலும் தனது வலைத்தளத்தில்கூட மெளனிகாவுக்கும் தனக்குமான உறவு பற்றி வெளிப்படையாக எழுதியிருந்தார். மெளனிகா தான் நடித்து சம்பாதித்த பணத்தில் பாலுமகேந்திராவுக்காக நிறைய செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் அவருடைய திரையுலக நண்பர்கள்.

இருந்தும், மெளினிகாவுடனான உறவை பாலுமகேந்திராவின் முதல் மனைவி அகிலா இப்போதுகூட விரும்பவில்லை. அகிலாவை ‘அம்மா’ என்றே அழைக்கும் இயக்குநர் பாலாவுக்கு இதனாலேயே மெளனிகா மீது ஒரு இனம் புரியாத வெறுப்பு ஏற்பட்டிருந்ததாம்.  பாலாவின் இந்த மிரட்டலும், கோபமும்தான் மெளனிகாவை அங்கே வர விடாமல் செய்துவிட்டது என்கிறார்கள்.

அனைத்து 2-வது மனைவிகளுக்கும் ஏற்படக்கூடிய கொடுமைதான் தனக்கும் ஏற்பட்டுள்ளது என்றாலும், தன்னால் இதனை ஜீரணிக்க முடியவி்ல்லை என்று போனில் பேட்டியளித்திருக்கும் மெளனிகா கூறியுள்ளார். 

இத்தனை பட்டவர்த்தனமாக உண்மைகள் தெரிந்திருந்தும், அவரது உடலை பார்க்க உரிமையுள்ள ஒருவரை அங்கு வரக் கூடாது என்று மிரட்டுவதும், பார்க்க அனுமதிக்காததும்  எந்தவிதத்திலும் நியாயமில்லாத செயல்.. 

அவரிடம் அதீத நெருக்கமுள்ளவர்களைவிட அவருடைய குடும்பத்தினர்தான் அவருடைய உடலுக்கு சொந்தக்காரர்கள். அந்த உரிமையை அவர்களிடமிருந்து தட்டிப் பறித்து தங்களது உரிமையை நிலை நாட்ட நினைப்பதெல்லாம் சடலமாக படுத்திருப்பவருக்கு செய்யும் துரோகமும், களங்கமுமாகும்.. சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி..!

Our Score