வலம்புரி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜசேகர் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘மௌன வலை’. இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப் படமாகும்.
இந்தப் படத்தில் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்மிருதி நாயகியாக நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் மதுசூதனன் ராவ், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி, உபாசனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் – பாரூக் J.பாஷா, இசை – ஜாவித் ரியாஸ், தொகுப்பாளர் – பிலோமின் ராஜ், கலை இயக்குநர் – மணிமொழியன் ராமதுரை, உடை வடிவமைப்பு – தயான் கார்த்திகேயன், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் ஷாம், நடனம் – சங்கர், இணை இயக்குநர் – அந்தோணி ராஜ், ஒப்பனை – சுரேஷ் குமார், உடை – சாரங்கன், தயாரிப்பு நிர்வாகம் – முருகன், மக்கள் தொடர்பு – ஜான்சன், வடிவமைப்பு – ரெட் டாட் பவன், நிர்வாக தயாரிப்பு – கார்த்திக் சந்திரன், தயாரிப்பாளர் – S . ராஜசேகர், இயக்குநர் – பெஸ்ட் ராபர்ட்.
இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன், இயக்குநர் நெடுஞ்சாலை கிருஷ்ணா, நடிகர் சாந்தனு பாக்யராஜ், கில்டு அமைப்பின் தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.