ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது

ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, ராய் லட்சுமி நடித்திருக்கும் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ திரைப்படம் வரும் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகிறது.

பல வெற்றி படங்களைத் தயாரித்த ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. இந்தப் படம் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள 88-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் சத்யராஜும், நாயகியாக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். இவர்களுடன் கோவை சரளா, சதீஸ், ஸ்ரீமன், தம்பி ராமையா, மனோபாலா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வி.டி.வி.கணேஷ், தேவதர்ஷினி, சுகன்யா, சாம்ஸ், மயில்சாமி, மகாநதி சங்கர், கும்கி அஸ்வின், பாண்டு, மதன்பாப், காக்கா முட்டை ரமேஷ், வைஷ்ணவி திருநங்கை ஆகியோரும் நடித்துள்ளனர். அஸ்வத் தோஸ்ராணா, வம்ஷி கிருஷ்ணா, சரண்தீப் ஆகியோர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். ராய் லட்சுமி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.

ஒளிப்பதிவு – சர்வேஸ் முராரி, வசனம் – ஜான் மகேந்திரன், சாய்ரமணி, இசை – அம்ரிஷ். பாடல்கள் – வைரமுத்து, விவேகா, சாய்ரமணி, சொற்கோ, லோகன். கலை – செல்வகுமார், எடிட்டிங் – பிரவீன்.கே.எல்., சண்டை பயிற்சி – சிறுத்தை கே.கணேஷ்,  நடனம் – ராகவா லாரன்ஸ், சிவா லாரன்ஸ், மோகன் கிஷோர், தயாரிப்பு – ஆர்.பி.சௌத்ரி,  திரைக்கதை, இயக்கம் – சாய்ரமணி.

படம் பற்றி பேசிய இயக்குநர் சாய் ரமணி, “போலீஸ் துறைக்குள் இரண்டு போலீஸ் அதிகாரிகளுக்குள் ஈகோ யுத்தம் நடக்கிறது. இரண்டு அதிகாரிகளுக்குள் உண்டான மோதலில் நுழைந்து லாபம் பார்க்க நினைக்கிறான் ஒரு சமூக விரோதி. அவனது எண்ணம் நிறைவேறியதா… இல்லையா.. என்பதுதான் இந்தத் திரைப்படம்..!

ராகவா லாரன்ஸ் இதுவரை ஏற்றிராத போலீஸ் கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார். இது அவருடைய திரையுலக வாழ்க்கையில் இன்னொரு பரிணாமத்தைக் கொடுக்கும்.

ராய் லட்சுமிக்கும், ராகவா லாரன்ஸுக்கும் இடையில் ஒரு கெமிஸ்ட்ரி உண்டு. திரைப்பட ரசிகர்கள் இந்த ஜோடியின் ஆட்டத்தை திரையில் காண எப்போதும் ஆர்வமாகவே இருப்பார்கள். அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியே ஒரு பாடல் காட்சியில் ராய் லட்சுமியை நடனமாட வைத்திருக்கிறோம். அந்தப் பாடலும், நடனமும் ரசிகர்களையும் நிச்சயம் எழுந்து நடனமாட வைக்கும்.

அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும்வகையில் பக்கா கமர்ஷியலாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது..” என்றார் இயக்குநர் சாய்ரமணி.

இந்தப் படத்தை தமிழகம் முழுவதிலும் டாக்டர் சிவபாலன் வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 17-ம் தேதியன்று திரைக்கு வர காத்திருக்கிறது. ‘காஞ்சனா’ தொடர் வெற்றிக்குப் பிறகு வரும் ராகவா லாரன்ஸின் படம் இது என்பதால் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திற்கு பெரும் வரவேற்பு காத்திருக்கிறது எனலாம்.

 

Our Score