full screen background image

போலீஸ் ஸ்டேஷனில் வளரும் இளைஞர்களின் கதைதான் ‘MONEY’ திரைப்படம்

போலீஸ் ஸ்டேஷனில் வளரும் இளைஞர்களின் கதைதான் ‘MONEY’ திரைப்படம்

ஆர்.ஆர்.சினி புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘MONEY’ படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நிதின் சத்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த காயத்ரி நாயர் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

மேலும், யோகி பாபு, புவனேஸ்வரி, சிங்கமுத்து, பெஞ்சமின், மனோபாலா, ராஜ்நாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டி.பி.ராஜசேகர், படத் தொகுப்பு – டி.வினோத், பாடல்கள் – நா.முத்துக்குமார், பார்த்திபன், நடனம் – பவர் சிவா, VFX & DI – நாகூரான், இணை இயக்குநர்கள் – அசோக் சரவணா, கே.ஆர்.குமார், நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.பெஞ்சமின், தயாரிப்பு – ராஜூ, ரபீக், எழுத்து, இயக்கம் – ஆர்.டி.ராகன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆர்.டி.ராகன், “ஒரு போலீஸ் நிலையத்தில் இரண்டு வாலிபர்கள் அனாதையாக வளர்ந்து வருகிறார்கள். அங்கேயே எடுபிடி வேலைகளை செய்து கொண்டு பிழைப்பை ஓட்டி வருகிறார்கள்.

கதையின் திருப்பமாக ஒரு நாள் அந்த ஊரின் பிரபலமான தாதாவான நாசரின் செல்போனை இருவரும் திருடுகிறார்கள். அதில் வரும் போன்கால்களையெல்லாம் அட்டெண்ட் செய்து தாதாவுக்கு கிடைக்க வேண்டிய பணத்தையெல்லாம் இவர்கள் இடைமறித்து பறித்துக் கொண்டு சுகபோகமாக வாழ்கிறார்கள்.

நாளடைவில் தன்னுடைய பணமெல்லாம் பறி போன நிலையில் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்குச் செல்கிறார் தாதா. இந்தக் குழப்பம் நீங்கியதா..? தாதாவிடம் இவர்கள் மாட்டிக் கொண்டார்களா..? சிக்கல் எப்படி தீர்ந்தது..? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறோம்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. தற்போது சென்சார் போர்டில் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதுவே படத்திற்குக் கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம். படம் விரைவில் வெளியாகவுள்ளது..” என்றார்.

Our Score