தனது வசிகர அழகாலும், திறமையான நடிப்பாலும் இந்திய திரை ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி, இந்திய சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது.
1967-ம் வருடம் ஜூலை 7-ம் நாள் ‘துணைவன்’ என்ற படத்தின் மூலமாக குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதேவியின் 300-வது படமாக அவர் தற்போது நடித்து வரும் ‘மாம்’ என்ற ஹிந்தி படம் அமைந்துள்ளது.
ஸ்ரீதேவியின் இந்த 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும்விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர், இந்த ‘மாம்’ படத்தை அதே ஜுலை 7-ம் தேதியன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் நடிகை ஸ்ரீதேவியே டப்பிங் பேசுவுள்ளாராம்.
ஸ்ரீதேவியின் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘மாம்’ திரைப்படத்தை Zee ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் இருவரும் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரித்துள்ளனர். இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.