full screen background image

ஒரு பூனையைச் சுற்றி உருவாகியிருக்கும் ‘மியாவ்’ திரைப்படம்..!

ஒரு பூனையைச் சுற்றி உருவாகியிருக்கும் ‘மியாவ்’ திரைப்படம்..!

சமூக, கலை மற்றும் வியாபார உலகில் பிரபலமான நபரான வின்சென்ட் அடைக்கலராஜ், தனது குளோபல் வுட்ஸ் மூவீஸ்  சார்பில் தயாரித்துள்ள படம் ‘மியாவ்’. 

ராஜா என்ற  நம்பிக்கையூட்டும் இளைஞர் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். காயத்ரி, ஷினி என்று இரண்டு அழகு ராணிகள் நாயகிகளாக நடிக்கின்றனர்.  படத்தின் இசையமைப்பாளர் புதியவரான ஸ்ரீஜித்  என்டவனோ. 

விதம்விதமான பாணியில்  அமையும் வெவ்வேறுவிதமான படங்களை, களம் காணும் பல இளம் இயக்குனர்கள் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதுதான்   இன்றைய தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய முக்கிய விஷயம். அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குநரான சின்னாஸ் பழனிச்சாமி.  

விளம்பரப் படத் துறையில் பல சாதனைகள் படைத்த இவர் ஒரு பூனையை அடிப்படையாக வைத்து உருவாக்கியிருக்கும் முற்றிலும் வித்தியாசமான திரில்லர் ப்ளஸ் காமெடி படம் இது.  

‘மியாவ்’ படம் பற்றி பேசிய இயக்குநர் சின்னாஸ் பழனிச்சாமி, “பூனையின் ‘மியாவ்’ சப்தம் குழந்தையின் குரல் போன்ற மென்மையில் இருந்து கொடிய அலறல் போன்ற திகில்வரை பல்வேறு சூழலுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்கள் நிறைந்த பல வகைகள் உண்டு, அவற்றின் அடிப்படையில் இந்தப் படம் பயணிக்கிறது .

ஒரு  பூனையை அடிப்படையாகக் கொண்டு வரும் முதல் தமிழ் சினிமா இதுதான் என்று, எங்களால் பெருமையோடு சொல்லிக் கொள்ள முடியும். இதுவரை  யாரும் எடுக்காத இந்த பாணியிலான படம், புதுமையான படங்களைப் பார்க்கத் துடிக்கும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும். 

அதே நேரம் இது போன்ற படங்களுக்கு பொருத்தமான தயாரிப்பாளர் கிடைப்பதும் மிக முக்கியம். அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலிதான். எனது தயாரிபாளருக்கு  சினிமா  எடுப்பதன் அழகியலும் புரிந்து இருக்கிறது. படத்தை தயாரிப்பதிலும் மதிப்புக் கூட்டுவதிலும் இன்றைய நிலையில் ஒரு தயாரிப்பாளரின் பங்கு என்ன என்பதும் அவருக்கு  தெரிந்து இருக்கிறது. 

நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று எல்லா விசயத்திலும் நாங்கள் இளையவர்கள். ஆனால் எங்கள் படத்தின் போஸ்டரை, நாங்கள் எல்லாம் யாரைப் பார்த்து வளர்ந்தோமோ அந்த கலை மேதையான பி.சி.ஸ்ரீராம் சார் வெளியிட்டுக் கொடுத்தது எங்களுக்குக் கிடைத்த பெரும் பெருமை..” என்றார்  பெருமிதத்தோடு.

Our Score