நமீதா கதாநாயகியாக  நடிக்கும் ஹாரர் படம் ‘மியா’

நமீதா கதாநாயகியாக  நடிக்கும் ஹாரர் படம் ‘மியா’

‘ஈ’ ஸ்டூடியோ சார்பில் தயாரிப்பாளர் மின்ஹாஜ் தயாரித்துள்ள படம் ‘மியா.’

நடிகை நமீதா, நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளித் திரையில் மீண்டும் கதாநாயகியாக இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா, ராஜேஸ்வரி, ராஜசேகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை – ரெஜி மோன், ஒளிப்பதிவு – ரவி சுவாமி, கலை – பிரபா மன்னார்காடு, பாடல்கள் – முருகன் மந்திரம், ஆடை வடிவமைப்பு – அஜி, படத் தொகுப்பு- வினீத், மக்கள்தொடர்பு – ரியாஸ் கே. அஹ்மது, தயாரிப்பு நிறுவனம் – ஈ ஸ்டூடியோ, தயாரிப்பாளர் – மின்ஹாஜ், எழுத்து, இயக்கம் – ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா.

இரட்டை இயக்குநர்களாக களமிறங்கும் ஆர்.எல்.ரவி மற்றும் மேத்யூ ஸ்கேரியா, மலையாளத்தில் ஹிட்டடித்த ‘ஸ்பீடு’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர்களாவர்.

ஹாரர் மூவியான இப்படத்தை பற்றி இயக்குநர்கள் பேசும்போது, “கணவன் – மனைவி பந்தத்தில் இருவருக்குமிடையே ஏற்படும் பிரச்சனையை மையமாக கொண்டதுதான் இந்த ‘மியா’ படத்தின் கதை.

கதாநாயகியாக வரும் நமீதா தன் கணவருக்கு பிடிக்காத ஒரு செயலை செய்வதால், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகிறார்கள்.

இதற்கிடையில் பேய் இருக்கும் வீட்டில் தனியாக மாட்டிக் கொள்ளும் நமீதாவிற்கு என்ன நேர்ந்தது..? அவர் எந்த மாதிரியான அனுபவங்களை சந்திக்கிறார்..? என்பதை சமூகத்திற்கு தேவையான கருத்துடன் படமாக்கியுள்ளோம்.

இந்த ‘மியா’ திரைப்படம், மற்ற பேய் படங்களை போல யாரையும் பயமுறுத்தவோ, திகிலடையவோ செய்யாது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்ட நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘மியா’ திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும்…” என்றனர்.

Our Score