full screen background image

சித்தார்த்-ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம்!

சித்தார்த்-ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் ‘மிஸ் யூ’ திரைப்படம்!

7 மிலிஸ்பர் செகண்ட்  நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சாமுவேல் மேத்யூ முதன்முதலாக தயாரித்துள்ள படம் “மிஸ் யூ”.

இப்படத்தில் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். தெலுங்கு, கன்னடத்தில் புகழ் பெற்ற ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும் ஜே.பி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், ‘லொள்ளு சபா’ மாறன், சஸ்டிகா என பலரும் முக்கியப் பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

பின்னணி இசைக்கு பேர் போன ஜிப்ரான் இப்படத்தின் பாடல்களுக்காக சிறப்பாக மெனக்கெட்டு 8 பாடல்களை வழங்கியுள்ளார். ‘சதுரங்க வேட்டை’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த KG.வெங்கடேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பை தினேஷ் பொன்ராஜ் கவனிக்கிறார். தினேஷ் நடனம் அமைக்கிறார். களத்தில் சந்திப்போம், பேப்பர் ராக்கெட் போன்ற படங்களுக்கும் வெப்சீரீஸ்களுக்கும் வசனம் எழுதிய அசோக்.R இப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளதோடு, இயக்குனரோடு திரைக்கதை அமைத்துள்ளார்.

பாடல்கள் – மோகன் ராஜன் & ரோகேஷ், கலை இயக்கம் – சிவசங்கர், சண்டைப் பயிற்சி இயக்கம் – தினேஷ் காசி. இயக்குநர் என்.ராஜசேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு அனைவரும் காதலித்து ரசித்து பார்த்த  ‘பழைய’ சித்தார்த்தைப் பார்க்கலாம். 

கதாநாயகன் நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இல்லாமல், நகைச்சுவை மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்படத்தைக் கலகலப்பாக வடிவமைத்துள்ளார் இயக்குநர்.

Our Score