பாலாவும், மிஷ்கினும் இணைந்து வழங்கும் ‘பிசாசு’..!

பாலாவும், மிஷ்கினும் இணைந்து வழங்கும் ‘பிசாசு’..!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு சில காலம் அமைதியாக இருந்த இயக்குநர் மிஷ்கின் மீண்டும் களமிறங்கிவிட்டார்.. இம்முறை சொந்தத் தயாரிப்பு இல்லை.. கை கொடுத்திருப்பவர் இயக்குநர் பாலா..

தன்னுடைய பி ஸ்டூடியோஸ் சார்பில் மிஷ்கின் இயக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாக பாலா அறிவித்திருக்கிறார். நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் லிஸ்ட் எதுவும் வெளியாகவில்லை.

ஏற்கெனவே ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டத்திற்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் இழந்துவிட்ட மிஷ்கினுக்கு நிச்சயம் இது ஆறுதல் பரிசுதான்..

அதே சமயம் சென்ற படத்தின் வெளியீட்டின்போது போஸ்டர் ஒட்டக்கூட காசும் இல்லை.. ஆளும் இல்லை என்று அவர் பட்ட அவஸ்தை, தமிழ்ச் சினிமாவின் எந்தவொரு இயக்குநருக்கும் நேரவே கூடாது..

பாலாவும் மிஷ்கினும் ஒரே கோட்டில் பயணிக்க ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இருவருமே அவரவர் வேலைப்பாட்டில் விற்பன்னர்கள். தவறே சொல்ல முடியாத கதையாக்கத்தை தங்களுக்குச் சொந்தமாக வைத்திருப்பவர்கள்.. தமிழ்ச் சினிமாவின் பெருமைக்குரிய இயக்குநர்கள்.

இவர்களிருவரும் இணைந்து படம் அளித்தால் அது எப்படியும் ஒரு பிசாசு மாதிரியான படமாகத்தான் இருக்கும் என்று அனைவருமே நம்பலாம்..

உஷ்.. படத்தின் பெயரே ‘பிசாசு’ என்பதுதான்..

பொருத்தமா இருக்கே..! ஸ்வீட் எடு.. கொண்டாடு..!

Our Score