full screen background image

ஸோம்பிக்கள் பற்றிய முதல் படம் ‘மிருதன்’..!

ஸோம்பிக்கள் பற்றிய முதல் படம் ‘மிருதன்’..!

ஜெயம் ரவி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் புதிய படம் ‘மிருதன்’.

சென்ற ஆண்டு ‘ரோமியோ ஜூலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ என்று மூன்று தொடர் வெற்றிகளைப் பெற்றிருக்கும் ஜெயம் ரவி, தனது அடுத்த வெற்றிக்காகவும் காத்திருக்கிறார் போல தெரிகிறது.

இந்த ‘மிருதன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்கிறார். லட்சுமி மேன்ன், ஜெயம் ரவியுடன் ஜோடி சேர்வது இதுதான் முதல் முறை.

இவர்கள் தவிர, ’என்னை அறிந்தால்’ படத்தில் நடித்த பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட், ஆர்.என்.ஆர்.மனோகர், ‘சாட்டை’ ரவி, கிரேன் மனோகர் மற்றும் ‘கல்யாணம் முதல் காதல்வரை’ சீரியல் ஹீரோவான அமித் பார்கவ் ஆகியோரும் நடிக்கின்றனர்.

எஸ்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ‘வடகறி’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். கலை – எஸ்.எஸ்.மூர்த்தி, படத் தொகுப்பு: கே.ஜெ. வெங்கட் ரமணன். இவர் ‘ஆடாம ஜெயிச்சோமடா’ படத்துக்கு படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். நடனம் – பாபி, சண்டை பயிற்சி – கணேஷ். இவர் ‘சிறுத்தை’ படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர். உடைகள் – ஜாய் கிறிசில்டா, தயாரிப்பு நிர்வாகம் – குமார், சிவகுமார், ராஜ்குமார், மஞ்சு. இசை – டி.இமான், பாடல்கள – மதன் கார்க்கி, தயாரிப்பு – செராஃபின் சேவியர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – சக்தி சுந்தர்ராஜன்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவி டிராபிக் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார். மேலும் இந்தப் படம் ஸோம்பிக்கள் பற்றிய புதுமையான படம்.

ஒரு குறிப்பிட்ட வகை கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக மனிதர்கள் மிருகங்கள் போல அடுத்தவர்களை கடித்துத் தின்பவர்களாக மாறிவிடுவார்கள். உணர்வுகள் அற்ற ஜடங்களாக அலைவார்கள். இவர்களைத்தான் ‘ஸோம்பிக்கள்’ என்று அறிவியல் பெயரில் அழைக்கிறார்கள். இந்த ஸோம்பிக்கள் பற்றி ஹாலிவுட்டில் நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டது. தமிழில் இதுதான் முதல் படம்.

பொருத்தமாக இருக்க வேண்டுமே எண்ணித்தான் இந்தப் படத்தின் தலைப்புக்கு ‘மிருகம்’ என்கிற சொல்லிலிருந்து முதலிரண்டு எழுத்துகளையும், ‘மனிதன்’ என்கிற சொல்லிலிருந்து கடைசி இரண்டு எழுத்துகளையும் எடுத்து ‘மிருதன்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படம் ஒரே நாளில் நடக்கிற கதை என்பதால் மிக வேகமான விறுவிறுப்பான திரைக்கதையுடன் அமைந்திருக்கிறதாம், ஏற்கனவே எல்லா வகை ஹாலிவுட் ஸோம்பிகளையும் பார்த்துவிட்ட நம் தமிழ் ரசிகர்களுக்கு, இந்த ‘மிருதன்’ புதிய அனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score