’90 லட்சத்தை ஏமாற்றிய இயக்குநர்’ என்ற தலைப்பில் நாட்களுக்கு முன்னால் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.
‘மின்னல்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வைப்பதற்காகவும், படத்தை எடுத்து முடிப்பதற்காகவும் தன்னிடம் 90 லட்சம் ரூபாயை வாங்கிவிட்டு இப்போது படத்தை ரிலீஸ் செய்யாமல் இருப்பதால சிராஜ் என்கிற இயக்குநர் மீது புகார் கொடுத்திருந்தார் புதுமுக நடிகர் ஆதவன்.
இப்போது அதற்கு பதிலளித்து இயக்குநர் சிராஜும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளாராம்.
தனது புகாரில், “ஆதவனிடமும், அவரது மாமாவிடமும் நான் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால் மின்னல் படத்தை எடுத்து முடிக்க உண்மையான ஆன செலவு 2 கோடியே 12 லட்சமாகும். இதில் 80 லட்சம் போக மீதி பணத்தை நான்தான் செலவு செய்தேன். நான் 1 கோடியே 20 லட்சம் ரூபாயை கடன் வாங்கி இந்தப் படத்திற்காக செலவு செய்துள்ளேன். அந்தப் பணத்தை எனக்குக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிடுவதாக ஆதவன் கூறினார். நானும் அதற்குச் சம்மதித்திருந்தேன். இப்போது அந்தப் பணத்தைக் கொடுத்துவிட்டு படத்தை வெளியிடாமல் இருப்பது ஆதவன்தான். என்னையும் மிரட்டுகிறார். அவர் மீது உரிய நடவடி்ககை எடுக்க வேண்டும்..” என்று கூறியுள்ளாராம்..!
யாருமே வாங்க வர மாட்டாங்கன்னு தெரிஞ்சா.. நாமதான் சொந்தமா ரிலீஸ் செஞ்சாங்கணும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா.. ஏன் இப்படி படம் தயாரிக்க வரணும்..? இப்போ அல்லல்படணும்..?
சினிமா எப்படி போகுது பாருங்க..?