நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..!

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..!

11-வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது ‘மிக மிக அவசரம்’ திரைப்படம்.

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடிப்பில் வெளிவந்த படம் ‘மிக மிக அவசரம்’.

தமிழில் இருந்து பல படங்கள் நாமினேட் ஆகியிருந்த நிலையில் இயக்குநர் பாலு மகேந்திரா பெயரிலான சிறந்த திரைப்படத்திற்கான விருது ‘மிக மிக அவசரம்’ படத்திற்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘மிக மிக அவசரம்’ படத்தின் நாயகியான நடிகை ஸ்ரீப்ரியங்காவுக்கும் கிடைத்துள்ளது.  

வரிசையாக பல விருதுகளைக் குவித்து வரும் ‘மிக மிக அவசரம்’ திரைப்படத்திற்கு இப்போது கூடுதலாக இரண்டு விருதுகளை நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் பெற்றிருப்பது தனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது என்கிறார் ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி.

Our Score