full screen background image

அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கக் கூடாதா..? கேட்கிறார் முன்னாள் ஹீரோயின்..!

அஜீத்தும், விஜய்யும் சேர்ந்து நடிக்கக் கூடாதா..? கேட்கிறார் முன்னாள் ஹீரோயின்..!

‘மெட்டி ஒலி’ தொடரில் நடித்த காயத்ரியை தெரிந்திருக்குமே..? ஆனால் அவர் ‘தல’ அஜீத்திற்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்த கதை தெரியுமா..?

அஜீத் பற்றியும், விஜய் பற்றியும் அவர் இன்றைய ‘குமுதம்’ பத்திரிகைக்கு அளித்திருக்கும் பேட்டி இது :

“தல’ அஜீத், ‘தளபதி’ விஜய் சேர்ந்து நடிச்சாங்களே.. ‘ராஜாவின் பார்வையிலே’.. அதுல ‘தல’ லவ் பண்ணினது யாரை தெரியுமா? என்னைத்தான்..! மறைந்த ரகுராம் மாஸ்டர் புண்ணியத்துல அந்த சான்ஸ் கிடைச்சது. அந்தப் படத்துல நடிச்சது இன்னிக்கும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.

இங்க தாம்பரம் பக்கம்ன்னு நினைக்கிறேன். ரயில்வே டிராக்கை ஒட்டிய ஒரு இடத்துல ஷூட்டிங். 15 நாள் விஜய், அஜீத் நான் மூணு பேருமே இருந்தோம். விஜய், அஜீத் இரண்டு பேருக்குமே அது என்ட்ரி நேரம். அப்ப எனக்கு வயசு பதினைஞ்சுதான் இருக்கும். அஜீத்துக்கு ‘ஆசை’ படம் ரிலீஸாகாத நேரம்.

அந்தப் படத்துக்கு முன்னாடியே ‘பாசமலர்கள்’ என்கிற படத்துல அஜீத்தோட வொர்க் பண்ணியிருந்ததால என்கிட்ட சகஜமா பேசினார். ஆனா விஜய்க்கு எங்கிட்ட பேசத் தயக்கம் இருந்திச்சு. ஆனா அஜீத்தோட நல்லா பழகினார்.. பிற்காலத்துல ரெண்டு பேரும் ரெண்டு துருவங்களா வருவாங்கன்னு அப்ப யோசிச்சுப் பார்த்தாங்களான்னு தெரியலை.

ஆனா அந்தப் படத்துக்குப் பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்கலைன்னு கேள்விப்பட்டேன். என்னோட ஒரு ஆசை.. ஏன் ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சாத்தான் என்ன..? அவங்க மட்டும் ஓகே சொன்னா.. ரெண்டு பேருக்கும் ஈக்குவலா பிரமாண்டம் காட்ட இயக்குநரும், செலவு பண்ண தயாரிப்பாளரும் இப்ப இல்லையா என்ன..?”

இப்படி ரொம்ப ஈஸியா கேட்டுட்டாங்க மேடம்… “ரெண்டு பேரும் ஏன் சேர்ந்து நடிக்கக் கூடாது”ன்னு..?

தனித்தனியா நடிச்சா லாபம் நிறைய கிடைக்கும். சேர்ந்து நடிச்சா குறைவா கிடைக்கும்.. எது நல்லது..? இதெல்லாம் தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமலா இருக்கும்..? இதுக்கு இப்போதைக்கு சான்ஸே இல்லை.. ஒருவேளை இன்னும் ஒரு முப்பது வருஷம் கழிச்சு அப்பா, தாத்தா கேரக்டர்ல ரெண்டு பேரும் நடிக்கும்போது இது சாத்தியமாகலாம்..!

Our Score