full screen background image

இன்று ‘மெர்சல்’ படத்திற்குக் கிடைத்த மூன்று பரிசுகள்..!

இன்று ‘மெர்சல்’ படத்திற்குக் கிடைத்த மூன்று பரிசுகள்..!

வரும் தீபாவளியன்று திரைக்கு வரவிருக்கும் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஸ்ரீதேனாண்டாள் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் ‘மெர்சல்’. இதில் இளைய தளபதி விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா மூவரும் நடித்துள்ளனர். இதனால் படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்திருப்பதாகத் தெரிகிறது.

ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு, படத் தொகுப்பு – ரூபன், கலை – முத்துராஜ், கதை – கே.வி.விஜயேந்திர பிரசாத், வசனம் – ரமணகிரிவாசன், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் – விவேக், வேல்முருகன், சண்டை பயிற்சி – அனல் அரசு, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், நடனம் – ஷோபி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், கிளாமர் சத்யா, நிர்வாகத் தயாரிப்பு – ஹெச்.முரளி, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – ஆர்.மகேந்திரன், தயாரிப்பு – என்.ராமசாமி, ஹேமா ருக்மணி, எழுத்து, இயக்கம் – அட்லி.

இத்திரைப்படம் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100-வது படம் என்பதால் மிக பிரம்மாண்டமான செலவில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இதுவரையிலும் 120 கோடி ரூபாய் வரையிலும் இந்தப் படத்திற்காக செலவாகியுள்ளதாம்.

‘மெர்சல்’ திரைப்படத்திற்கு இன்றைக்கு மிக, மிக முக்கியமான நாள். இன்றைக்கு ‘மெர்சல்’ படம் சம்பந்தமாக மூன்று முக்கிய விஷயங்கள் நடந்திருக்கின்றன.

mersal-movie-poster-3

முதல் விஷயம்.., சென்னை உயர்நீதிமன்றத்தில் ‘மெர்சல்’ டைட்டில் தொடர்பாக நடந்து வந்த வழக்கில் ‘மெர்சல்’ படத்திற்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ‘மெர்சல்’ டைட்டிலை விஜய் படக் குழுவினர் பயன்படுத்துவதற்கு தடையில்லை என்று தீர்ப்பு வந்திருக்கிறது.

இரண்டாவது விஷயம், படத்திற்கு சென்சாரில் ‘U/A’ சான்றிதழ் கிடைத்துள்ளது. ‘யு’ சர்டிபிகேட் பெற்று வரிவிலக்கு கிடைத்தால், அதில் பெரிய அளவுக்கு லாபம் கிடைக்காது என்பதால் இந்த சர்டிபிகேட்டை தயாரிப்பாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம்.

மூன்றாவது விஷயம்.. ‘மெர்சல்’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை மிகக் கடுமையான போட்டிகளுக்கிடையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

தமிழக அரசின் கேளிக்கை வரிவிலக்கை ரத்து செய்யக் கோரி இன்று முதல் புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிட மாட்டோம் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்திருப்பதால் தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் வராதோ என்று நினைத்து விஜய் ரசிகர்கள் அனைவரும் கலக்கமடைந்துள்ளனர்.

தீபாவளியன்று தங்களது ஹீரோ விஜய்யை திரையரங்கில் சந்திக்க முடிவெடுத்திருக்கும் நேரத்தில் இப்படியொரு தடைக்கல்லா என்று வருத்தத்தில் உள்ளனர். ஆனாலும், அதற்குள்ளாக எப்படியும் அரசுடன் சமாதானமாகி படம் வெளியாகிவிடும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புடன் உள்ளனர் விஜய் ரசிகர்கள்.

Our Score