full screen background image

விஜய்சேதுபதியை அசத்திய கதை மெல்லிசை..!

விஜய்சேதுபதியை அசத்திய கதை மெல்லிசை..!

நடிகர் விஜய் சேதுபதி அடுத்துத் தான் நடித்து வரும் மெல்லிசை படம் பற்றி பாராட்டித் தள்ளிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நான் கேட்ட கதைகளில் என்னை அசர வைத்தது இந்தப் படத்தின் கதைதான் என்கிறார் விஜய் சேதுபதி.

படத்தின் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குனர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இவர். இந்த படத்தின் மூலம்  இயக்குனராக அறிமுகமாகிறார் .

“நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலை சொல்லும் கதை. இந்த நகரத்தை எதனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராஸ்யமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பதுதான் இந்த கதையின் கரு..” என்றார்.

கதாசிரியனை போலவே கதையை பற்றி தெளிவாக தெரிந்து வைத்து இருக்கும் நாயகன் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு எவரையும் சிந்திக்க விடாமல் செய்து இருக்கிறார் என்பதை படத்தை பார்த்து நிச்சயம் சொல்லலாம்.

படத்தின் தலைப்பை பற்றி பேசும்போது, “மெல்லிசை என்பது மேலும் மேலும் கேட்க தூண்டும் சுகமான இசை வடிவம், மேலும் இந்த படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே ‘மெல்லிசை” என விளக்கம் அளித்தார் இயக்குநர்.

இசைக்கும், நவீன கதை அமைப்புக்கும் களமாக அமையும் ‘மெல்லிசை’ படத்தின் இசை அமைப்பாளர் சாம் அறிமுக இசை அமைப்பாளர் ஆவார். ஒளிபதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

“விஜய் சேதுபதி இந்த கதையை எதேச்சையாக கேட்ட மாத்திரத்தில் கால்ஷீட் தர ஒப்பு கொண்ட பின் நான் பேசியது ஒளிப்பதிவாளர் தினேஷிடம்தான். அவர் கொடுத்த நம்பிக்கையும் அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் அவர் காட்டிய வேகமும் பிரமாதம். இப்போதுதான் கதை சொன்ன மாதிரி இருக்கிறது, இதோ படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி, மற்றும் ரெதேஷ்வேலு தயாரிக்கும் இந்த ‘மெல்லிசை’ நிச்சயம் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும் படமாக இருக்கும்..” என்று கூறுகிறார் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி.

Our Score