GB STUDIO PRIVATE LIMITED மற்றும் JSK FILM CORPORATION இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘மேகா’
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லையை தாண்ட முயன்றால் என்ன ஆகும் என்பதை காதலும், த்ரில்லரும் கலந்து ரொமான்டிக் கதையாக உருவாக்கியிருக்கும் படம்தான் இந்த ‘மேகா’.
‘மங்காத்தா’, மற்றும் ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமரா’ படங்களில் நடித்திருந்த அஸ்வின் இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். அவர் தடயவியல் நிபுணராக முகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மும்பையை சேர்ந்த சிருஷ்டி மற்றும் பெங்களுரை சேர்ந்த அங்கனா ராய் கதாநாயகியாக நடிக்க ஒய்.ஜிமகேந்திரன், ஜெயப்பிரகாஷ், விஜயகுமார், ரவிபிரகாஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் ஏற்கனவே அவரின் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்திற்க்கு 12 நாட்கள் தொடர்ந்து பின்னணி இசையமைத்து படத்தை மேலும் மெருகேற்றியுள்ளார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம் பெறாமல் போன ‘புத்தம் புது காலை’ பாடல் இந்த ‘மேகா’ படத்திற்க்காக டிஜிட்டலில் ரெக்கார்ட் செய்யப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கபட்டிருக்கிறது.
சுப்ரமணிய சிவாவிடம் அசோசியேட்டாக பணிபுரிந்த கார்த்திக் ரிஷி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். லியனார்டோ டாவின்சியின் ஓவியங்களில் இருக்கும் லைட்டிங் மற்றும் வண்ணங்களின் கலவையை மாதிரியாகக் கொண்டு ஆர்.பி. குருதேவ் செய்திருக்கும் ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். படத்தின் எந்தவொரு நொடியிலும் பார்வையாளர்களின் கவனம் சிதறாத வகையில் ராம் சுதர்ஷன் படத் தொகுப்பு செய்திருக்கிறார். நடனத்தை ராதிகா மற்றும் அஜய் கவனிக்க, ஆக்சன் பிரகாஷ் இயல்பான முறையில் சண்டை காட்சிகளை படமாக்கிருக்கிறார்.
GB STUDIO PRIVATE LIMITED சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் மற்றும் செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கின்றனர். JSK FILM CORPORATION சார்பில் J.சதிஷ்குமார் இப்படத்தை ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.