full screen background image

மீரா ஜாஸ்மின்-ராஜேஷ் காதல் முறிவுக்கு காரணம்..?

மீரா ஜாஸ்மின்-ராஜேஷ் காதல் முறிவுக்கு காரணம்..?

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மீரா ஜாஸ்மினின் திடீர் திருமணம் மீடியாக்களை கொஞ்சம் திகைக்க வைத்தது. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலரும், மாண்டலின் இசைக் கலைஞர் சீனிவாஸின் சகோதரருமான மாண்டலின் ராஜேஷின் வீடியோ ஆல்பம் நிகழ்ச்சியில் அவருடன் ஜோடியாக வந்து கலந்து கொண்டார்.

இந்த நிலைமையில் திடீரென்று எந்தவித காதல் முறிவு செய்தியும் வெளிவராத சூழலில் அவருடைய அவசரமான காதல் டைவர்ட் டூ கல்யாணக் காட்சிகள் ஆச்சரியப்பட வைத்தன.. அதற்குள் எப்படி இது நிகழ்ந்தது..? காதலர்களுக்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் யோசிக்கக்கூட நேரமில்லாமல் அட்சதை போட்டு வாழ்த்தி முடித்தாகிவிட்டது..!

இப்போது சென்னை சபாக்கள் பக்கம் கொஞ்சம் தலையை நீட்டியபோது கிடைத்தத் தகவல்கள் மீரா ஜாஸ்மின்-மாண்டலின் ராஜேஷின் காதல் முறிவுக்கு காரணமாக ஒரு விஷயத்தைச் சொல்கிறது.  

மீரா ஜாஸ்மின் கிறிஸ்தவர். மாண்டலின் ராஜேஷ் இந்து.. இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இடையில் சில சமயங்களில் சண்டை, சச்சரவு வந்தாலும் மோதல், ஊடல், காதலாக வளர்த்துக் கொண்டேதான் வந்தனர்.

கடைசியில் இப்போது கல்யாண ரேஸுக்கு வந்து நின்றபோது மீரா ஜாஸ்மினின் குடும்பத்தார் கிறிஸ்துவராக மதம் மாறும்படி ராஜேஷை வற்புறுத்தியிருக்கிறார்கள்.ராஜேஷின் குடும்பமோ “வருஷா வருஷம் சபாக்கள்ல கச்சேரி போடுற ஆச்சாரமான குடும்பம் எங்களோடது.. வேணும்னா உங்க பொண்ணை இந்துவா மாறச் சொல்லுங்க..” என்று உடும்புப் பிடியாய் பிடித்துவிட்டதாம்.. 

இந்த இரு குடும்பச் சண்டை சச்சரவில் காதலர்கள் இருவருக்குமே சில மாதங்கள் மண்டை காய்ந்துவிட்டதாம்.. இருவருக்குமே அவரவர் மதங்களை விட்டுக் கொடுக்க முடியாத சூழலில்… சுமூகமாக பிரியலாம் என்று பட்டென்று பேசி முடித்து, சட்டென்று கை குலுக்கிவிட்டு பிரியாவிடை பெற்றார்களாம்..! 

“மீரா ஜாஸ்மின் எப்போதுமே மிக அவசரத்தனமானவர்” என்கிறார்கள் மலையாள பத்திரிகையாளர்கள். நடிக்க வந்த புதிதில் படப்பிடிப்புத் தளத்திற்கு தனது குடும்பம் மொத்தத்தையும் அழைத்து வந்து இம்சை செய்வதில் அரசியாகத் திகழ்ந்தவர் இவர். பின்பு அதே குடும்பத்தினர் தனது சொத்துக்களை கைப்பற்றிக் கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக மலையாள நடிகர் சங்கத்தின் விழாவில் மைக்கில் பேசும்போதே கதறினார்..  கொஞ்ச நாளில் அதே குடும்பத்தினருடன் மீண்டும் ஒட்டிக் கொண்டு தனக்கு எல்லாமே தன் குடும்பம்தான் என்றார்..

மலையாள நடிகர் பிருத்விராஜை காதலித்து அது நிச்சயத்தார்த்தம்வரைக்கும் போன நிலையில் கல்யாணத்துக்கு பின்பு வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற வருங்கால மாமியார் மல்லிகாவின் நிபந்தனையை ஏற்க மாட்டேன் என்று சொல்லி சட்டென்று ஒரே நாளில் அந்தக் காதலுக்கு ‘பை பை’ சொல்லிவிட்டு வந்துவிட்டார்..

இந்தக் காதலிலும் ‘ராஜேஷ் போன மாசம் இருக்கார்’. ‘இந்த மாசம் இல்லை’. ‘அடு்தத மாசம் தெரியாது..’ என்ற ரீதியில்தான் தனது காதலை வளர்த்து வந்தார் மீரா.. எப்படியாவது இதாவது செட் ஆகிவிடுமோ என்று நினைக்க.. அது வேறெங்கோ போய் முடிந்திருப்பதுதான் திகைக்க வைக்கிறது..! 

Our Score