மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற ‘தட்டத்தின் மரியத்து’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நாயகன் வால்டர் பிலிப்ஸ், நாயகி இஷா தல்வார், அர்ஜுன், வெங்கட், எடிட்டர், தியாகராஜன், இயக்குநர் மித்திரன் ஆர். ஜவகர், தயாரிப்பாளர் எஸ்.வி.டி.ஜெயசந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பொதுவாக இசை வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களுக்காக ஒன்று, இரண்டு பாடல்கள் மட்டும்தான் விசுவலுடன் ஒளிபரப்புவார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் ஒளிப்பரப்பினார்கள். ஒவ்வொரு பாடலும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பாடல் காட்சிகளின் விஷுவல்களை பார்க்கும்போது ‘பம்பாய்’ படம் போலவே தெரிந்தது.
விழாவில் நடிகர் அர்ஜுன் பேசும்போது, “மித்திரன் ஜவகர் என்னை படத்தில் நடிக்க அழைத்தவுடன், நான் ஏதோ தனுஷ்கூடதான் நடிக்க போறேன்னு கனவோட போனேன். ஆனால் ஹீரோ வால்டர்தான் எனச் சொன்னார். படத்துல ஹீரோவவிட எனக்குத்தான் காஸ்ட்லியான ட்ரெஸ். அந்த அளவுக்கு இயக்குநர் எனக்கு பார்த்து பார்த்து ட்ரெஸ் செலெக்ட் பண்ணினார். கேமராமேன் விஷ்ணு அழகா விசுவல் பண்ணிருக்கார்..” என்றார்.
நாயகன் வால்டர் பிலிப்ஸ் பேசும்போது, படத்தில் பணியாற்றிய ஒருவர்விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். மேலும் படத்தை பற்றிய நிறைய விசயங்களை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசும்போது, “ரொம்ப நாளா ஒரு நல்ல கதைக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். எனக்காக தாணு சார் நிறைய ஸ்க்ரிப்ட் அனுப்பினார். ‘விஜய்யைவிட உனக்குத்தான் அதிகமா ஸ்க்ரிப்ட் அனுப்பிருக்கேன்.. எதுவுமே பிடிக்கலையா?’ எனக் கேட்டார். அதுக்கப்புறம் ஒரு நாள் இந்த ஸ்கிரிப்ட் வந்துச்சு. உடனேயே ‘இந்த ஸ்கிரிப்ட் பிடிச்சிருக்கு’ என தாணு சார்கிட்ட சொன்னேன். உடனேயே ‘உனக்கு பிடிச்சிருக்குல்ல.. கண்டிப்பா நல்லா இருக்கும்.. பண்ணு’ என உற்சாகப்படுத்தினார்.
அடுத்து சங்கிலி முருகன் ஐயா.. அவருக்கும் நன்றி சொல்லணும். அவர் இந்த படத்துக்காக நிறைய பண்ணிருக்காரு. இந்த வயசுலயும் இவ்ளோ எனர்ஜியா இருக்காரு.
இயக்குநர் ஜவகர், நான் ஒரு புதுமுக ஹீரோ என்றே ஒரு நாளும் நினைக்கவில்லை. எவ்வளவு ப்ரீடம் கொடுக்க முடியுமோ அவ்ளோ கொடுத்தார். அவருக்கு நன்றி சொல்லணும்.
மேலும் கேமராமேன் விஷ்ணு அவ்வளவு அழகா ஒளிப்பதிவு செஞ்சிருக்கார். இஷாதான் இந்த படத்துல நடிக்கணும்ன்னு முன்னமேயே பிக்ஸ் பண்ணிட்டோம். ஆனா அவங்க நடிக்க ஒத்துப்பாங்களானு ஒரு டவுட்.
நிறைய பேரை ஆடிசன் வச்சோம். ஆனா ஒருத்தர்கூட செட் ஆகலை. வேற வழியில்லாம இஷாகிட்டவே கேட்டோம். முதல்ல ஒரு சின்ன தயக்கம் அவருக்கு. என்கூட நடிக்கணுமான்னு.. அப்புறம் சரின்னு சொல்லிட்டாங்க. ஒரு புது ஹீரோவோட நடிக்கிறோம்னு எந்த ஒரு அலட்டலும் இல்லை. அவ்வளவு நன்றாக பழகினார்..” என்றார்.
நடிகை இஷா தல்வார் பேசும்போது, “இதன் மூலமான ‘தட்டத்தின் மரையத்து’ மலையாள படம்தான் என்னோட முதல் படம். அந்த படத்துல நடிச்ச அதே பீலோடதான் இந்த படத்துலயும் நடித்தேன். இந்த படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வந்துள்ளேன். இதற்கு வால்டருக்கும், ஜவகருக்கும் நன்றி சொல்லணும்..” என்றார்.
இயக்குநர் மித்திரன் ஆர்.ஜவஹர் பேசும்போது, “முதல்ல தயாரிப்பாளர் ஜெயச்சந்திரன் பத்திதான் சொல்லணும். இப்படி ஒரு அன்பானவர நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு நன்றாக பழகக் கூடியவர். தாணு சார் இந்த படத்தை பண்ணுறார்னு சொன்னதுமே எனக்கே ஆச்சரியம். அவரு பேரை பெரிய, பெரிய படத்தோட பேனர்ல பார்த்துட்டு, இப்போ நம்ம படத்தோட பேனர்ல பாக்கும்போது ஒரு நம்பிக்கை வந்திடுச்சு. தாணு சாருக்கும் நன்றி சொல்லணும்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும்போது. ‘யாரடி மோகினி’ படத்துல வர்ற, ‘எங்கேயோ பார்த்த மயக்கம்’ பாடல் மாதிரியே, இந்த பாட்டையும் எடுக்கணும்னு சொல்லிட்டே இருப்பார். ‘கண்டிப்பா எடுக்குறேன்’னு சொல்லிதான் அவர்கிட்ட இசையை வாங்குனேன். அது போலவே எடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்.
அந்த மலையாள படத்தை அப்படியே ரீமேக் பண்ணலை, அது ரொம்ப போர். தமிழுக்கு என்ன தேவையோ அதையெல்லாம் சேர்த்து எடுத்துருக்கேன். இதுக்கு முக்கிய காரணம் என்னோட கோ-டைரக்டர் ஜீவன்தான். அவரு இந்த படத்துக்காக என்னோட சேர்ந்து நிறைய உழைச்சிருக்காரு. மேலும் என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. கேமராமேன் விஷ்ணுவுக்கும் நன்றி..” என்றார்.