‘அம்மன்’ படத்தை மறக்க முடியுமா..? பட்டித் தொட்டியெல்லாம் தியேட்டர்களில் பெண்களே சாமி வந்து ஆடியதில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிய படம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரிஸ்ஸா, வங்காளம், போஜ்பூரி, மராத்தி என்று பல மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெற்றி பெற்ற படம்.
இத்திரைப்படத்தை இயக்கிய தெலுங்கின் மெகா ஹிட் இயக்குநர் கோடிராமகிருஷ்ணா இதே பாணியில் இயக்கி இருக்கும் படம்தான் இந்த ‘மீண்டும் அம்மன்’. தெலுங்கில் ‘அவதாரம்’ என்ற பெயரில் தயாரித்து சென்ற 18-ம் தேதியன்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள். தமிழில் ‘மீண்டும் அம்மன்’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது.
இதில் அம்மன் வேடத்தில் பானுப்ரியா நடித்திருக்கிறார். கதாநாயகனாக ரிச்சர்ட் நடித்திருக்கிறார். கதாநாயகியாக குட்டி ராதிகா நடித்திருக்கிறார். மற்றும் நாகமணி, ஜெய்வாணி, கோலிசோடா வில்லன் மது ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வெங்கட்
இசை – கிருஷ்ணா
பாடல்கள் – A.R.K..ராஜராஜா, அருண்பாரதி, ராஜகனி ராகில், குளஞ்சி , உவரி.க.சுகுமார் சுறாசங்கர்.
எடிட்டிங் – நந்தமூரி ஹரி
வசனம் எழுதி தமிழ் உருவாக்கம் பொறுப்பேற்றிருப்பவர் A.R.K..ராஜராஜா. இவர் தமிழாக்க பொறுப்பேற்று இதுவரை 200 படங்களுக்கு மேல் வெளியாகி இருக்கிறது. எஸ்.சுந்தரலட்சுமி வழங்க சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
படம் பற்றி A.R.K..ராஜராஜாவிடம் கேட்டோம்…
“இப்படியொரு பிரமாண்டமான படத்தை, கிராபிக்ஸ் கலக்கலான படத்தை பார்த்திருக்க முடியாது. தனது பக்தையையும்,அவளது குடும்பத்தையும் காக்க அம்மன் அரணாக இருக்கிறார். அம்மனின் அரனை மீறி அந்த குடும்பத்தை எப்படியாவது அழித்தே தீருவது என்று போராடும் தீய சக்திக்கும் இடையே நடக்கும் போராட்டமே ‘மீண்டும் அம்மன்.’
உலக அளவில் கிராபிக்ஸ் கலக்கலாக ஒவ்வொரு காட்சிகளையும் மிக மிரட்சியடையும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்று வருடங்கள் உழைக்க வேண்டி இருந்தது. அப்படி உழைத்து மிக சிறப்பான கிராபிக்ஸை ஜெமினி நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. சமீபத்தில் இப்படம் ஆந்திராவில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது…” என்கிறார் A.R.K. ராஜராஜா.